ஆலுமா டோலுமா பாடலுக்கு ஆட்டம் போட்ட “அதிதி ஷங்கர்” – வைரல் வீடியோ உள்ளே..

0
ajith
ajith

சினிமா உலகில் வாரிசு நடிகர், நடிகைகளின் வரவேற்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. இருப்பினும் அந்த வாரிசு நடிகர், நடிகைகள் தனது திறமையை வெளிக்காட்டி  தன்னை தக்க வைத்து கொண்டால் மட்டுமே நீண்ட தூரம் பயணிக்க முடியும் அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் அதிதி ஷங்கர்.

சினிமா உலகில் ஹீரோயின்னாக நடித்து தற்போது  வெற்றி கண்டுள்ளார் முதல் படத்திலேயே தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி உள்ளதால் இவருக்கென  தற்போது ரசிகர்கள் உருவாகியுள்ளனர் மேலும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கியுள்ளது. மேலும் மார்க்கெட் அதிக அளவில் உயர்த்தி உள்ளார்.

நடிகை அதிதி ஷங்கர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான விருமன் திரைப்படத்தில் நடித்து அறிமுகமாகி உள்ளார். அதிதி சங்கர் இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்து மாவீரன் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகை அதிதி ஷங்கர் சினிமாவில் வருவதற்கு முன்பாக மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தனது ஆசை நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் சினிமா உலகில் தற்போது நடிகையாக நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் அப்பொழுது நடிகை அதிதி ஷங்கர் அஜித் நடிப்பில் வெளியாகிய வெற்றி பெற்ற வேதாளம் திரைப்படத்தில் இடம் பெற்று ஆலுமா டோலுமா பாடலுக்கு..

இளம் நடிகை அதிதி ஷங்கர் நடனமாடிய அசத்தி உள்ளார் அதன் வீடியோ தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள்  அந்த வீடியோவையும் பரப்பி கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ வீடியோ.