ரசிகர்களின் எதிர்பார்ப்பை சுக்குநூறாக உடைத்த ஆலியா மானசா – ராஜாராணி 2 சீரியல் குறித்து போட்ட புதிய பதிவு.! என்ன இப்படி சொல்லிடாங்க..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்கள் பலரின் ஃபேவரட்  சீரியல்களில் ஒன்று ராஜா ராணி சீசன்2. இதன் முதல் சீசன் அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இரண்டாவது சீசனையும் இயக்குனர் பிரவீன் பெண்ணெட் எடுத்து வருகிறார்.

முதல் சீசனில் கதாநாயகனாக சஞ்சீவ் மற்றும் ஆலியா மானசா நடித்த வந்த நிலையில் ராஜாராணி சீசன் 2வில் கதாநாயகனாக திருமணம் என்ற சீரியல் மூலம் புகழ்பெற்ற நடிகர் சித்து மற்றும் ஆலியா மானசா நடித்து வருகின்றனர். இந்த சீரியல் தற்போது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றன இதில் ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சந்தியாவின் கனவை..

நிறைவேற்றுவதற்காக சரவணன் அவரது அம்மாவை எதிர்த்து ஒரு பக்கம் போராடி வருகிறார். இப்படி பல ட்விஸ்ட்டுகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் ஒரு சில தினங்களுக்கு முன்பு கதாநாயகி மாற்றப்பட்டது. நடிகை ஆலியா மானசா ராஜா ராணி தொடரில் அவருடன் நடித்து வந்த சஞ்சீவ் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவருக்கும் ஒரு அழகிய மகள் உள்ள நிலையில் மீண்டும் ஆலியா ராஜாராணி சீசன் 2ல் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் நடித்து வரும் போது இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்ததை அடுத்து தொடர்ந்து நடித்து வந்த ஆலியா குழந்தை பிறக்க உள்ள அந்த மாதத்தில் சீரியலில் இருந்து விலகினார் அவருக்கு பதில் தற்போது ரியா என்ற பிரபலம் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ரியா தற்காலிகமாக தான் நடித்து வருகிறார் ஆலியா சில மாதங்களுக்குப் பிறகு இந்த சீரியலில் திரும்பி வந்துவிடுவார் என ரசிகர்கள் பலரும் நினைத்து வந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஆலியா மானசாவிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் ராஜா ராணி தொடரில் இனி நான் நடிக்க போவதில்லை என தெள்ளத்தெளிவாக  குறிப்பிட்டுள்ளார்.

aalya manansa
aalya manansa

Leave a Comment