கௌதம் – ஐஸ்வர்யா ஃபர்ஸ்ட் நைட்டை தடுக்க சித்ராதேவி செய்த வேலை, முறியடித்த மகா.. ஆஹா கல்யாணம் இன்றைய எபிசோடு

Aaha Kalyanam
Aaha Kalyanam

Aaha kalyanam serial October 2 : இன்றைய எபிசோடில் ஒரு வழியாக எல்லா பிரச்சனையும் முடிந்து கௌதம் ஐஸ்வர்யா கல்யாணம் நல்லபடியாக நடந்துள்ளது. இந்த கல்யாணம் சித்ராதேவி மற்றும் கௌதம் இருக்கு பிடிக்கவில்லை என்றாலும் தற்போது சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்யனும் என காயத்ரி, பாட்டி போன்றோர் சொல்வதற்கு ராஜலட்சுமி..

அதான் ஏற்கனவே இவங்களுக்கு ஃபர்ஸ்ட் நைட் முடிஞ்சிடுச்சே, இப்ப என்ன புதுசா என்று கேட்கிறார். சித்ராதேவியும் இந்த தரித்திரம் புடிச்சவளுக்கு ஃபர்ஸ்ட் நைட் ஒரு கேடா என்று திட்டுகிறார்.. பிறகு பாட்டி இதெல்லாம் சம்பிரதாயம் கல்யாணம் ஆன பிறகு ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நம்ம ஏற்பாடு செஞ்சே ஆகணும் என்று சூர்யாவிடம் கௌதம் ஐஸ்வர்யா ஃபர்ஸ்ட் நைட்டுக்கு நீயும் மகாவும் சேர்ந்து ரெடி பண்ணுங்க என்று சொல்கின்றனர்.

அதேபோல் மகாவும் சூர்யாவும் சேர்ந்து பூவெல்லாம் வாங்கிட்டு வந்து ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.. பிறகு ஐஸ்வர்யாவிடம் பால் காய்ச்சி கொடுப்பதற்காக மகா ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி வைத்திருக்கிறார்.. இதைப் பார்த்த சித்ராதேவி பாலில் எலுமிச்சை பழத்தை புரிந்து ஊற்றினால் பால் திரிந்து போகிவிடும் அதனால் அபசகுணம் என்று எல்லோரும் நினைப்பாங்க என பாலில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விடுகிறார் இதை தூரத்தில் இருந்து மகா பார்த்து விட்டார்.

பிறகு அப்போது வந்த விஜய் இடம் நீ கொஞ்ச நேரம் சித்ரா தேவியே திசை திருப்பு என்று சொல்லிவிட்டு அந்த பாலை கீழே ஊத்திவிட்டு வேறு ஒரு பாலை அடுப்பில் வைத்து விட்டார். பிறகு ஐஸ்வர்யா வந்து அந்த பாலை காச்சுகிறார் அப்பொழுது மகா ஐஸ்வர்யாவிடம் இந்த வீட்ல நீ கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும், இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கூட பால் வீணா போகணும் என்பதற்காக சித்ராதேவி..

இந்த பால்ல லெமன புழிஞ்சு ஊத்துனாங்க என்று மகா சொல்வதற்கு ஐஸ்வர்யா அத்தைய பத்தி என்கிட்டேயே குறை சொல்றியா. அக்கா நல்லா இருக்க கூடாதுன்னு நினைக்கிற ஒரே தங்கச்சி நீயா தான் இருப்ப என மகாவை திட்டுகிறார்.. பிறகு மகா இந்த அக்காவுக்கு யார் நல்லவங்க கெட்டவங்க என்றே தெரியவில்லை என்று யோசிக்கிறார்..

கடைசியாக ஐஸ்வர்யா கௌதமை பார்த்து என்னை கழட்டி விடலாம் என்று எவ்வளவோ திட்டம் போட்ட ஆனா அதெல்லாம் முறியடிச்சு கற்ப நாடகம் போட்டு உன்ன கல்யாணம் பண்ணிட்டேன் இனிமேதான் என் ஆட்டமே இருக்கு என மைண்ட் வாய்ஸில் நினைக்கிறார் இதோட இன்றைய எபிசோடு முடிந்துள்ளது.