பாட்டி கொடுத்த நகையை திருடிய சித்ராதேவி.. திருட்டு பள்ளியில் இருந்து தப்பிப்பாரா கோடீஸ்வரி.. பரபரப்பின் உச்சத்தில் ஆஹா கல்யாணம்..

ஆஹா கல்யாணம் சீரியலில் கோடீஸ்வரியை எப்படியாவது வீட்டை விட்டு வெளியே அனுப்ப வேண்டும் என சித்ராதேவி பலமுறை முயற்சி செய்து கொண்டிருக்கிறார் ஆனால் அனைத்தையும் உடைத்து வீட்டில் இருந்து வருகிறார் கோடீஸ்வரி இந்த நிலையில் எப்படியாவது கோடீஸ்வரியை வெளியே அனுப்ப வேண்டும் என சித்ராதேவி கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறார்.

அப்படி இருக்கும் நிலையில் புதிய ப்ரோமோ வீடியோவில் பாட்டி ஒரு நகையை கொடுத்து பூஜையில் வைக்க சொல்லி மகாவிடம் கூறுகிறார் மகா அந்த நகையை எடுத்துக் கொண்டு பூஜை அறையில் வைக்கிறார். பூஜை அறையில் இருக்கும் நகையை பார்த்த சித்ராதேவி இதை திருடி விட்டால் கண்டிப்பாக ஒரு பூகம்பம் வெடிக்கும் என எதிர்பார்க்கிறார் அதன்படி அந்த நகையை திருடி கோடீஸ்வரி பையில் வைக்கிறார்.

உடனே பூஜை அறையில் சாமி கும்பிட அனைவரும் வரும் நேரத்தில் ராஜலட்சுமி நகையை கேட்கிறார் அப்பொழுது மகா பூஜை அறையில் தான் இருக்கிறது என நகை வைத்த இடத்தை பார்க்க அங்கு நகை கிடையாது உடனே சித்ராதேவி நம்ம வீட்டில் இருக்கும் யாரோ தான் நகையை திருடிப்பார்கள் அதனால் ஒரு ரூம் விடாமல் அனைத்து ரூமையும் தேட வேண்டும் என கூறுகிறார்.

ஒரு ஒரு ரூமாக தேட ஆனால் நகை கிடைக்கவில்லை கடைசியாக கோடீஸ்வரி ரூம் இருக்கும் அறையில் தேடிக் கொண்டிருக்கும் பொழுது கோடீஸ்வரி பேக்கை திறக்கிறார்கள் இத்துடன் ப்ரோமோ முடிகிறது கோடீஸ்வரி திருட்டு பழியிலிருந்து தப்பிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் சித்ராதேவி நினைத்தது போல் கோடீஸ்வரி திருட்டுப்பழியில் சிக்குவாரா இல்லை தப்பிப்பாரா என்பது இனிவரும் எபிசோடில் தெரியும்.