தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப் படத்திற்கு முதன் முதலில் வைக்கப்பட்ட தலைப்பு இதுதான்.! தலைவன் விட்டுக் கொடுத்தால் தானே வைக்க முடியும் .!

தமிழ் சினிமாவில் பல இயக்குனர்கள் இருந்தாலும் இயக்குனர் வெற்றிமாறனுக்கு தனி இடம் உண்டு அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது இந்த நிலையில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி திரைப்படம் ஆடுகளம் இந்த திரைப்படத்தில் தனுஷ் டாப்ஸி ஜெயபாலன் கிஷோர் என பலர் நடித்திருந்தார்கள்.

இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் சேவல் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. மேலும் தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இருவருக்குமே வெற்றித் திரைப்படமாக இந்த திரைப்படம் அமைந்தது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன என்பது குறித்து தற்போது வெற்றிமாறன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் முதலில் ஆடுகளம் திரைப் படத்திற்கு சண்டைக்கோழி என்றுதான் வைத்தார்கள் ஆனால் ஆரம்பிப்பதற்கு முன்னாடியே அந்த டைட்டிலை யாரோ ரிஜிஸ்டர் பண்ணிவிட்டார்கள் என கேள்விப்பட்டதும் பிறகு சேவல் என்ற வைக்கலாமென ரிஜிஸ்டர் செய்ய சென்றோம்.

ஆனால் இயக்குனர் ஹரி அந்த டைட்டிலை முன்பே ரிஜிஸ்டர் செய்துவிட்டார் இருந்தாலும் ஹரியிடம் அந்த டைட்டிலை கேட்டோம் ஆனால் ஹரி இப்பொழுதுதான் பூஜைகள் செய்துவிட்டு ரிஜிஸ்டர் செய்தோம் இல்லை என்றால் கொடுத்து விடுவேன் என கூறிவிட்டாராம். அதன்பிறகு ஆடுகளம் திரைப்படத்தில் களம் என டைட்டில் வைக்க முடிவு செய்தார்களாம்.

களம் என்ற வைத்தால் மிகவும் சிறியதாக இருக்கும் என யோசித்து ஆடுகளம் என கலந்து யோசித்து முடிவு செய்தோம் தனுஷ் சார் அவர்களுக்கும் இந்த டைட்டில் மிகவும் பிடித்து விட்டது அதனால் அதை வைத்து விட்டோம் என வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

Leave a Comment