மீண்டும் மீண்டும் விஜய்யை வைத்து கேம் ஆட்டும் அட்லி.! இதுவே இவருக்கு பொழப்பா போச்சு.

0
adlee
adlee

இயக்குனர் சங்கர்  அவர்களின் உதவி இயக்குனராக பணிபுரிந்து பின்னர் இயக்குனராக ‘ராஜா ராணி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அட்லீ. இவர் இயக்கிய முதல் படத்திலேயே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து முன்னணி நடிகரான விஜய் வைத்து  என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படமும் நல்ல வெற்றியைக் கொடுத்துள்ளது. அதன்பிறகு மெர்சல், பிகில், ஆகிய படங்களை விஜய்யை வைத்து இயக்கியுள்ளார். இவர்கள் கூட்டணியில் உருவான மூன்று திரைப்படங்களும் வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வருகிறேன்.

adlee
adlee

மேலும் 2019ஆம் ஆண்டு அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில் ராயப்பன், மைக்கேல் என இரண்டு வேடங்களில்  நடித்திருந்தார் விஜய். இயக்குனர் அட்லீ அவர்களிடம் பிகில் ராயப்பன் புகைப்படத்தை பகிர்ந்து ராயப்பன் கதையை மட்டும் வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்று  ரசிகர்கள் பதிவிட்டு இருந்தனர். அதைப் பார்த்த அட்லீ பிகில் ராயப்பன் போல் செஞ்சிட்டா போச்சு எனறு அதற்கு பதில் அளித்துள்ளார்.

அட்லீயின் பதிவால் விஜயின் ரசிகர்கள்  உச்சகட்ட சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். மேலும் இயக்குனர் அட்லீயும் விஜய்யும்  ஒன்றாக இணைய உள்ளதாக  கூறப்படுகிறது. இயக்குனர் அட்லீ பதிவிட்ட இந்த பதிவால் அதுவும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.