ஆதிபுருஷ் திரைப்படம் வசூலில் மிகப்பெரிய அடிவாங்கி இருப்பதனால் தற்பொழுது படக்குழு டிக்கெட்டின் விலையை மிகவும் குறைத்துள்ளது. ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்திருக்கும் திரைப்படம் தான் ஆதிபுருஸ் இந்த படத்தில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடிக்க, சைப் அலிகான் ராவணனாகவும், கீர்த்தி சனோனி சீதை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்கள்.
3டி தொழில்நுட்பத்தின் மூலம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக கடந்த 16ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தின் டீசரும், ட்ரைலரும் வெளியான நிலையில் கிராபிக்ஸ் என ரசிகர்கள் போல் செய்து வந்ததால் அதனை சரி செய்து படத்தை வெளியிட்டனர் ஆனாலும் படத்தை பார்த்துவிட்டு ரசிகர்களும் கிராபிக்ஸ் காட்சிகள் மீது கடுமையான விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான கார்ட்டூன் படத்தை எடுத்து வைத்திருக்கிறார்கள் என கூறிவரும் நிலையில் மிகவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் வசூல் மிகப்பெரிய அடியை வாங்கி உள்ளது 600 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் ரிலீஸ்சாகி பத்து நாட்களை கடந்திருக்கும் நிலையில் 450 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இவ்வாறு இப்படியே போனாலும் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாது என புதிய ஐடியாவை களம் இறக்கி உள்ளார்கள். அதன்படி ஆதிபுருஸ் படத்தின் டிக்கெட் 112 ரூபாயில் பார்க்கலாம் என அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே இதன் மூலம் அதிகம் கூட்ட வரும் என்பதனை மனதில் வைத்துக்கொண்டு இவ்வாறு படக் குழு செய்திருக்கும் நிலையில் இதனை பற்றி பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு ஆதிபுருஸ் திரைப்படம் இந்த அளவிற்கு அடி வாங்கியதற்கு முக்கிய காரணம் சில டெக்னிக்கல் பிரச்சனைகள் காரணமாக கூறப்படுகிறது. அதே போல் இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் சில கருத்தியல் பிரச்சனைகள் ராமாயணத்தின் ரசிகர்களை ரொம்பவே அப்செட் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.