திருமண கோலத்தில் நயன்தாரா போலவே இருக்கும் இளம் பெண்.. ஒருவேளை தங்கச்சியா இருப்பாரோ.? வெளியான புகைப்படம்

தமிழ் சினிமாவில் 90 கால கட்டங்களில் டாப் நடிகர்களாக இருந்த ரஜினி விஜய் அஜித் சூர்யா தனுஷ் சிம்பு போன்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அதற்குப் பின் வந்த இளம் நடிகர்களுடனும் சேர்ந்து நடித்து தனது மார்க்கெட்டை உச்சத்திலே வைத்திருப்பவர் நயன்தாரா இதனாலையே என்னவோ இவரை லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கின்றனர்.

இது போக ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் சில படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவர் நடிப்பில் O2 திரைப்படம் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது நயன்தாரா ஜவான் மற்றும் இறைவன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இப்படி சினிமாவில் பிஸியாக ஓடிக் கொண்டிருந்தாலும் மறுபக்கம் தனது கணவன் குழந்தைகளுடனும் நேரத்தை செலவிட்டு வருகிறார். இவர் கடந்தாண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பிறகு நயன்தாரா இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு குழந்தைகளை பெற்று செட்டில் ஆகி விடுவார் என சிலர் நினைத்தனர் ஆனால் திருமணம் முடிந்த சில மாதங்களிலேயே வாடகை தாயின் மூலம் இரு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார்

இதனால் அவரது சினிமா கேரியர் பாதிக்கப்படவில்லை மேலும் திருமணத்திற்கு பிறகு தான் அதிக பட வாய்ப்புகளை உடனுக்குடன் கைப்பற்றி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சினிமா நடிகர் நடிகைகளை போடவே வேடமிட்டு அலங்காரம் செய்து  ரசிகர்கள் சிலர் இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

அந்த மாதிரி புகைப்படங்கள் பல வைரல் ஆகின. அப்படி தற்போது நயன்தாரா போலவே ஒரு பெண் ஆடை அணிகலன்களை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் பார்ப்பதற்கு அச்சு அசல் நயன்தாராவைப் போலவே இருக்கின்றன அதனால் இந்த இரு புகைப்படங்களையும் ஒன்றாக இணைத்து ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகின்றனர் இதோ அந்த புகைப்படம் நீங்களே பாருங்கள்..

Leave a Comment