‘அமைச்சர் வேலுமணியயை” புகழ்ந்த குடியுரிமை தேர்வில் சாதனை படைத்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி !!

0

கண் பார்வை இழந்த பூரணசுந்தரி என்ற மாணவி தேசிய அளவில் நடைபெற்ற குடியுரிமை தேர்வில் 286வது இடத்தைப் பிடித்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.இவர் மதுரையை சேர்ந்தவர் ஆவார்.

இந்த நிலையில் IAS அகாடமியின் சேர்மனான எஸ்பி அன்பரசன் அவர்கள் குடி உரிமை தேர்வில் வெற்றி பெற்ற மாணவி பூரணசுந்தரிக்கு கோவையில் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இவரைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட இன்னும் சில அமைச்சர்களும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

மாணவி குறித்து எஸ்பி வேலுமணி அமைச்சர் அவர்கள் பேசும் பொழுது உங்களை போன்றவர்களுக்கு உதவி செய்ய நான் ஆவலாக இருக்கிறேன் மேலும் இது உங்களின் உழைப்பிற்கும் விடா முயற்சிக்கும் கிடைத்த பரிசு என்று பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

மாணவி பூரணசுந்தரி உங்களை போன்ற எளிமையான அமைச்சரை நான் பார்த்ததே இல்லை இவ்வளவு சுலபமாக பேசுகிறீர்கள் என்று அமைச்சரை பற்றி புகழ்ந்துள்ளார்.