லியோ படப்பிடிப்பு தளத்திலிருந்து லீக்கான வீடியோ.! அதிர்ச்சியில் லோகேஷ் கனகராஜ்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்பொழுது வம்சி இயக்கி உள்ள வாரிசு திரைப்படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் கடந்த மாதம் 11ஆம் தேதி வெளியாகி  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இதனை தொடர்ந்து தற்போது லோகேஷ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கான அப்டேட் கடந்த மாதம் வெளியான நிலையில் ரசிகர்கள் மதியம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த நிலையில் தற்போது இவர்கள் இருவரும் மறுபடியும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளம்பி இருக்கிறது என்றே சொல்லலாம்.

அது மட்டுமல்லாமல் இது ஒரு கேங்ஸ்டார் படமாக உருவாகி வருவதால் இந்த படத்தில் பல வில்லன்களை களம் இறங்கி இருக்கிறார் லோகேஷ் கனகராஜ் அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின், திரிஷா, பிரியா ஆனந்த், உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் லியோ திரைப்படம் எல்சியு-வில் இணைய இருக்கிறதா இல்லையா என்ற குழப்பமும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதற்கு ஏற்றார் போல சமீபத்தில் வெளியான லியோ படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவில் பல சஸ்பென்ஸ்களை வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ் இதனால் நெட்டிசன்களும் குழம்பி போய் இருக்கிறார்கள்.

இதனைத் தொடர்ந்து தற்போது காஷ்மீரில் முதல் கட்ட படபிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து நடிகர் விஜய் அவர்கள் சூட்டிங்கை முடித்துவிட்டு வெளியேறிய போது மர்ம நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் படக்குழுவினரை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த காட்சியில் விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இருவருமே இருக்கும்படியாக சில நொடி காட்சி இருக்கிறது இதனால் இந்த படம் எவ்வாறு உருவாகிறது என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இந்த வீடியோ தற்போது இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது.

இதோ அந்த வீடியோ…

https://youtu.be/LfIysezX2FQ

Leave a Comment

Exit mobile version