மக்களை கட்டுக்குள் வைக்க மேலும் ஒரு புதிய சேனலை துவங்கிய தொலைக்காட்சி நிறுவனம்.! இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்காக தான். சேனல் பெயரை சும்மா அதிருதே

TVchannel
TVchannel

பொதுவாக தமிழில் உள்ள தொலைக்காட்சிகள் மக்களை கவருவதற்காக புதிய புதிய சீரியல்கள் புதிய புதிய  ரியாலிட்டி ஷோகலை  ஒளிபரப்பி மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்கள் அந்த லிஸ்டில் விஜய் தொலைக்காட்சியும் மக்களை கவருவதற்காக புதிய புதிய நிகழ்ச்சி மற்றும் ரியல் ஷோக்கலை ஒளிபரப்பி வருகிறார்கள்.

டி ஆர் பியில் நல்ல ரேட்டிங் பதிக்க வேண்டும் என்பதற்காக புதிய ஷோக்களை ஒளிபரப்பி வெற்றி கண்டு வருகிறார்கள். அப்படி டிஆர்பிஎல் டாப் லிஸ்டில் இருக்கும் சன் தொலைக்காட்சிக்கு அடுத்ததாக விஜய் தொலைக்காட்சி நல்ல ரேட்டிங் பிடித்து வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பி விட்டு வந்த பிக் பாஸ் குக் வித் கோமாளி பிக் பாஸ் ஜோடிகள் கலக்கப்போவது யாரு சூப்பர் சிங்கர் நீயா நானா என அனைத்து நிகழ்ச்சிகளும் ரசிகர்களுடைய மிகவும் பிரபலம்.

இந்த சீரியல்களை தொடர்ந்து பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர். என பல சீரியல்கள் மக்களிடையே நல்ல பிரபலம் அந்த வகையில் சன் தொலைக்காட்சிகளுக்கு அடுத்தபடியாக டிஆர்பியில் விஜய் தொலைக்காட்சி கலக்கிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி சமீபத்தில் விஜய் மியூசிக் என்ற சேனலை தொடங்கியது அந்த சேனல் வெற்றி காரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் ஒரு புதிய சேனலை விஜய் தொலைக்காட்சி தொடங்கியுள்ளது அதற்கு விஜய் டக்கர் என பெயர் வைத்துள்ளார்கள் இந்த சேனலின் ஒளிபரப்பிற்காக புதிய ப்ரம்மோ ஒன்றை வெளியிட்டுள்ளார்கள் அந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது மேலும் இந்த சேனல் ட்ரெண்ட் செட்டாக அமையும் என அந்த ப்ரோமோவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த ப்ரோமோவில் அதிக இளைஞர்கள் இணைந்துள்ளார்கள் அழகான பாடல் மற்றும் டான்ஸ் இணைக்கப்பட்டுள்ளது மேலும் இது முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான சேனல் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் ஒவ்வொரு ஷோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.

இந்த வகையில் இளைஞர்களுக்காகவே புதிய சேனல் துவங்கப்பட்டுள்ளதால் ரசிகர்களை வெகுவாக இது கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது தமிழில் குழந்தைகளுக்காக ஒரு சேனல் இருக்கிறது ஆனால் யூத்திற்காக  புதிய சேனல் என்றால் அதில் எந்த மாதிரியான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.