கவனத்தை ஈர்க்கும் துணிவு டிக்கெட்.! திரையரங்கு உரிமையாளர் செய்த செயலால் குவியும் பாராட்டுக்கள்..

0
thunivu
thunivu

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது ஹெச் வினோத்துடன் இணைந்து துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் ஏற்கனவே நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்தை தொடர்ந்து தற்போது மூன்றாவது முறையாக இணைந்து உள்ள இவர்களுடைய கூட்டணி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

துணிவு திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி வெளியாக காத்திருக்கிறது இதனை தொடர்ந்து நடிகர் விஜயின் வாரிசு படமும் அதே தினத்தில் வெளியாக இருப்பதால் இரண்டு படங்களும் நேரடியாக ஒன்றுடன் ஒன்று மோத இருக்கிறது.

இதனால் இரண்டு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளத்தில் போட்டி போட்டுக் கொண்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் அஜித் விஜய் நடிப்பில் உருவாகியிருந்த வாரிசு துணிவு படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து இயக்குனர் ஹச் வினோத் துணிவில் பல சஸ்பென்ஸ் வைத்துள்ளார் இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் துணிவு படத்தில் அஜித்துடைய லுக்கை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டு இருக்கிறார்கள். மேலும் துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் அவர்கள் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதால் மங்காத்தா அளவிற்கு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.

இந்த நிலையில் தற்போது துணிவு மற்றும் வாரிசு படத்திற்கான முன்பதிவு டிக்கெட் ஓபன் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் ரசிகர்களை கவரும் வகையில் இருக்கிறது.

அதாவது பொள்ளாச்சியில் உள்ள ஒரு திரையரங்கில் துணிவு படத்தின் டிக்கெட் ரூபாய் நோட்டு போல டிசைன் செய்து விற்பனை செய்து வருகிறது அதுமட்டுமல்லாமல் அந்த ரூபாய் நோட்டில் துணிவு பாடத்தின் போஸ்டரையும் அச்சிட்டு உள்ளது இந்த ரூபாய் நோட்டு டிக்கெட் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது.

thunivu
thunivu