வாத்தி திரைப்படத்தில் இருக்கும் சர்ப்ரைஸ்.! கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.. வெளியான தரமான அப்டேட்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 17ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் இந்த திரைப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் வாத்தி திரைப்படத்தில் விஜய் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

நடிகர் விஜய் அவர்கள் வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தற்போது லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார் அது மட்டும் இல்லாமல் இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்பட்டு வருகிறது.

பல மாதங்களாக தளபதி 67 திரைப்படத்தின் அப்டேட்டை கேட்டு வந்த ரசிகர்களுக்கு பட குழு சமீபத்தில் சில அப்டேட்டுகளை வெளியிட்டது அந்த வகையில் தளபதி 67 திரைப்படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்ற அப்டேட்டையும் டைட்டில் ப்ரமோவையும் வெளியிட்டிருந்தது.

இதனால் ரசிகர்கள் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகம் வைத்திருக்கிறார்கள் அது மட்டுமல்லாமல் இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகும் தேதியையும் அந்த டைட்டில் ப்ரோமோவில் வெளியிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடிபெற்று வரும் நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று எதிர்பார்த்து இருந்து வருகிறார்கள். ஏனென்றால் அடுத்த கட்ட படபிடிப்பை கொடைக்கானலில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதனை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்யுடன் திரிஷா இணைந்துள்ளதும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது அதுமட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் வெங்கி அட்லோர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி திரைப்படம் வருகின்ற 17ஆம் தேதி நேரடியாக திரையரங்குகளில் வெளியாகும் நிலையில் இந்த படத்தின் இடைவேளையில் லியோ படத்தின் டைட்டில் ப்ரோமோவை விளம்பரமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Comment