சூப்பர் ஹிட் திரைப்படத்தை தவிர விட்ட பிரசாந்த், விஜய்.? நடுவில் வந்த நடிகர் அஜித்திற்கு அடித்த ஜாக்பாட்..

தமிழ் சினிமாவில் நன்றாக வளர்ந்து வந்த நேரத்தில் திடீரென காணாமல் போன நடிகர்களில் ஒருவர் தான் பிரசாந்த் இவர் 90 காலகட்டங்களில் அஜித்,விஜய் விட முன்னணியில் இருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான் ஆனால் என்ன நடந்தது என்பது தெரியவில்லை திடீரென இவரது மார்க்கெட் மிகவும் சரிந்து விட்டது பின்பு தமிழ் சினிமா பக்கமே ஒரு சில காலங்கள் வராமல் இருந்த நடிகர் பிரசாந்த் தற்பொழுது அந்தகன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கம் பேக் கொடுத்துள்ளார்.

மேலும் இவரது திரைப்பயணத்தில் நிறைய சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தாரோ அதே அளவுக்கு நிறைய திரைப்படங்களையும் தவற விட்டதாகவும் ஒரு தகவல் தற்பொழுது இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது. அதாவது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிகர் பிரசாந்த் அவர்கள் தான் நடிக்க வேண்டுமாம்.

ஆனால் இந்த ரோலில் அவரால் ஒரு சில காரணங்கள் குறித்து நடிக்க முடியாமல் போய்விட்டதாம். இதே வாய்ப்பு தான் நடிகர் விஜய்க்கும் சென்றதாம் ஆனால் அப்பொழுது அவரும் ஒரு சில திரைப்படங்களில் பிஸியாக இருந்ததால் அவராலும் நடிக்க முடியாமல் இறுதியாக அஜித் நடித்ததாக கூறப்படுகிறது.

என்னதான் இந்த திரைப்படத்தில் அஜித் நடித்திருந்தாலும் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது என்றே கூறலாம் கதையும் மிகவும் அற்புதமாக இருந்ததால் மக்களும் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு தந்தார்கள் மேலும் நடிகர் பிரசாந்த் அவர்கள் இந்த அந்தகன் திரைப்படத்தை.

ajith
ajith

தொடர்ந்து தமிழ் சினிமாவில் இன்னும் நிறைய திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.அதிலும் குறிப்பாக ஒரு சில ரசிகர்கள் நடிகர் பிரசாந்த் அவர்கள் நடித்துள்ள அந்தகன் திரைப்படம் எப்பொழுது வெளிவரும் எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Leave a Comment