அமைதிக்கு முன் ஒரு புயல் அஜித்தை தாறுமாறாக வர்ணிக்கும் பிரபல இயக்குனர்.! எல்லாம் பட வாய்ப்புக்குதானா.!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் அஜித் இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் படபிடிப்பு முடிவடைந்த நிலையில் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

துணிவு திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் விக்னேஷ் அவர்களுடன் இணையுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அது மட்டுமல்லாமல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித்தின் அடுத்த படம் தன்னுடைய பாணியில் இருக்கும் என ஒரு தகவலை வெளியிட்டு இருந்தார் இதனால்  துணிவு படத்தைவிட அஜித்தின் அடுத்த படத்திற்காக எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் பைக் பயணம் சென்றுள்ளதால் அங்கிருந்து அவர்களுக்கு புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அது மட்டுமல்லாமல் துணிவு படத்தின் படப்பிடிப்பின் போது கூட நடிகர் அஜித்குமார் பைக் பயணம் சென்றது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து துணிவு படப்பிடிப்பு முடிந்தவுடன் தாய்லாந்து சுற்றுப்பயணம் சென்றுள்ளார் நடிகர் அஜித் குமார்.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமாரின் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் அமைதிக்கு முன் ஒரு புயல் என அஜித்தை வர்ணித்து உள்ளார். அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா தயாரிப்பில் உருவாக உள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ட்விட்டை பதிவு செய்ததால் அஜித் 62 படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விக்னேஷ் சிவன் ரசிகர்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி விட்டார் என கூறப்படுகிறது.விக்னேஷ் சிவன் வெளியிட்ட புகைப்படத்தில் அஜித் குமார் அவர்கள் புத்தர் சிலையின் முன்பு செம ஸ்டைல ஆக நின்று போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படமும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

Leave a Comment