தனது அம்மாவுடன் சேர்ந்து விஜய் பாடிய பாடல்.! ஒவ்வொன்றும் வேற ரகம்

0
vijay
vijay

வாரிசு நடிகராக சினிமாவில் அறிமுகமான நடிகர் விஜய் தனது தந்தை எஸ் ஜே சந்திரசேகர் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு இவருடைய இயக்கத்தில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நடிகர் விஜய். அதுமட்டுமல்லாமல் தனது அம்மாவான சோபா சந்திரசேகர் உடன் சேர்ந்து பல திரைப்படங்களில் பாடியும் உள்ளார். அப்படி அம்மா மகன் இருவரும் பாடிய பாடல்களின் தொகுப்பை பற்றி தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்.

ரசிகன்:- 1994 ஆம் ஆண்டு வெளியான ரசிகன் திரைப்படத்தில் விஜய் மற்றும் சங்கவி உள்ளிட்டார் நடித்திருந்தனர் இந்த இந்த திரைப்படத்தை இயக்குனர் சந்திரசேகர் அவர்கள் இயக்கியுள்ளார். மேலும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள லவ் லவ் மாமா என்ற பாடலை விஜய் அவர்கள் தன்னுடைய அம்மாவான சோபா சந்திரசேகருடன் இணைந்து பாடியுள்ளார்.

விஷ்ணு:- 1995 ஆம் ஆண்டு வெளியான விஷ்ணு திரைப்படத்தில் தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரோட்டா என்ற பாடலை விஜய் தனது அம்மாவுடன் இணைந்து பாடிய முதல் பாடலாகும்.

ஒன்ஸ்மோர் :- விஜயின் அப்பாவான எஸ் ஜே சந்திரசேகர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், விஜய், சிம்ரன்,உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ஊர்மிலா என்ற பாடலை விஜயும் விஜயின் அம்மாவான சோபாவும் இணைந்து பாடியுள்ளனர்.

சிவகாசி:- விஜய் மற்றும் அசின் நடிப்பில் வெளியான அதிரடி குடும்ப செண்டிமெண்ட் திரைப்படம் சிவகாசி இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள கோட்டம்பாக்கம் ஏரியா என்ற பாடலை விஜய்யும் விஜயின் தாய் சோபாவும் சேர்ந்து பாடியுள்ளனர்.

வேட்டைக்காரன்:- விஜய் மற்றும் அனுஷ்கா நடிப்பில் வெளியான ஒரு ஆக்சன் திரைப்படம் வேட்டைக்காரன் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற என் உச்சி மண்டையில் சுருங்குது என்ற பாடலை சோபா சந்திரசேகரும் விஜயும் பாடியுள்ளனர்.