இணையத்தில் வைரலாகும் பிச்சைகாரன் 2 படத்தின் முதல் பாடல்.! வீடியோவுக்கு குவியும் லைக்குகள்…

இசையமைப்பாளராக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு கதாநாயகனாக மாறியவர் நடிகர் விஜய் ஆண்டனி. இவருடைய இசைக்காக பல ரசிகர்கள் இவர் பின்னாடி இருக்கிறார்கள் என்ரே சொல்லலாம் அந்த அளவிற்கு தன்னுடைய பாடல்கள் மூலம் பல ரசிகர்களை கட்டி வைத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

இப்படி பின்னணி இசை அமைத்து வந்த விஜய் ஆண்டனி நான் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறவே அடுத்தடுத்து சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன், சைத்தான், எமன், காளி, திமிர் பிடித்தவன், கொலைகாரன், என விஜய் ஆண்டனி பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.

எதார்த்தமான நடிப்புடன் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் அமைந்துள்ள அம்மா பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி அவர்கள் நடிக்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக காத்திருக்கிறது. மேலும் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ஆண்டனிக்கு திடீரென விபத்து ஏற்பட்டு இருக்கிறது அதுமட்டுமல்லாமல் அதன் பிறகு ஓய்வில் இருந்த விஜய் ஆண்டனி  தற்போது இந்த படத்தின் போஸ்ட் பிரோமோஷன் பணிகளையும் முழுமையாக முடித்து விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பிச்சைக்காரன் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து ஆரம்பகட்ட அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் யார் ஆன்டி பிகிலி என்று கேட்டு வந்தார்கள் அதற்கு விஜய் ஆண்டனி நான் தான் ஆன்ட்டி பிகில் என தெரிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இந்த ஆண்ட்டி பிகினி என தொடங்கும் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. இந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் செம்ம வைரல் ஆகி வருகிறது மட்டும் இல்லாமல் youtube இல் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ…

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment