முன்பதிவில் அடித்து நொறுக்கும் சர்தார், பிரிண்ஸ்.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வருபவர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்திக். சிவகார்த்திகேயன் தற்போது பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில் பிரின்ஸ் படமும் சர்தார் படமும் ஒரே தினத்தில் வெளியாக உள்ளது இது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்து வருகிறது. பிரின்ஸ் திரைப்படத்தில் சிவகார்த்தி அவர்கள் ஒரு பள்ளி ஆசிரியராக நடித்துள்ளார் அது மட்டுமல்லாமல் இந்த படம் ஒரு ஜாதி மதத்தை அடிப்படையாகக் கொண்டு காமெடி கலக்கலாக உருவாகி உள்ளது போல் தெரிகிறது.

அதனைத் தொடர்ந்து இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்த இரண்டு படங்களும் ஒன்றுடன் ஒன்று ஒரே நேரத்தில் மோத உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கார்த்திக் நடித்து முடித்துள்ள சர்தார் திரைப்படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இது தீரன் அதிகாரம் படம் போல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் பல கெட்டப்புகளில் நடிகர் கார்த்தி அவர்கள் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த இரண்டு படங்களும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதால் தற்போது முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது அதனால் பல ரசிகர்கள் இந்த படத்தை பார்ப்பதற்காக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து வருகின்றனர் அது மட்டும் அல்லாமல் இந்தப் படங்களின் மீதான எதிர்பார்ப்பு இதனால் தற்போது அதிகரித்து உள்ளது. இரண்டு படங்களும் வசூலில் லாபம் பார்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் நடிகர் கார்த்தி அவர்கள் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அப்போது இவர் நடித்திருக்கும் அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது அதேபோல் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது அப்படி இருக்கையில் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தற்போது மோத உள்ளனர்.

Leave a Comment