பிரபல நடிகைக்கு இயக்குனர் ஒருவர் பொது மேடையில் திடீரென முத்தம் கொடுத்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, இயக்குனர் ஏ.எஸ் ரவிக்குமார் சவுத்ரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரகபாதர சாமி என்ற திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.
இந்த படத்தில் ராஜ் தருண் ஹீரோவாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிரபல நடிகை மன்னரா சோப்ரா நடித்துள்ளார் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர் அப்படி தயாரிப்பாளர் தில் ராஜ் கலந்துகொண்டு டீசரை வெளியிட்டார். டீசர் வெளியீட்டு விழாவின் பொழுது படக்குழுவினர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்த நேரத்தில் திடீரென்று அனைவரும் முன்பும் இயக்குனர் நடிகைக்கு முத்தமிட்டார் இது அந்த நடிகைக்கு அசோகரிகமாக இருந்தது. அதாவது இதனை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை பதறிப் போக அந்த புகைப்படத்தை ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றனர்.
இவ்வாறு இயக்குனர் ஏ.எஸ் ரவிக்குமார் சவுத்ரி பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நடிகை மன்னரா சோப்ராவிற்கு முத்தம் கொடுக்கிறார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் இவ்வாறு ரவிக்குமார் சவுத்ரி செய்தது மிகவும் தவறு என கூறி வருகின்றனர். தற்பொழுது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.