OTT தளத்தில் வெளிவந்த சில நாட்களிலேயே “ஜெயிலர்” படைத்த சாதனை.! மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

Jailer OTT : 40 வருடங்களுக்கு மேலாக நடித்து ஓடிக்கொண்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில். தற்பொழுது 72 வயது ஆகுவதால் ரஜினி வருடத்திற்கு ஒரு படத்தை கொடுக்கிறார். அந்த வகையில் நெல்சன் உடன் கைகோர்த்து ரஜினி நடித்த ஜெயிலர்  திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

படம் முழுக்க முழுக்க அப்பா – மகன் பாசம் தான் வழக்கமான சப்ஜெக்ட்டாக இருந்தாலும் ரஜினியின் மாறுபட்ட நடிப்பு, விநாயகத்தின் ரவுடிசம், மோகன்லால் மற்றும் சிவ ராஜ்குமார், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி காமெடி ஆகியவர்களின் மாஸ் என்ட்ரி என ஒவ்வொருவரும் கதாபாத்திரத்தில் பின்னி பெடல் எடுத்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப அடியன்ஸ் மத்தியில் படம் சென்றடைந்தது.

அதனால் கூட்டம் கூட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர் படம் வெளியாகி 25 நாட்களை தாண்டி பல திரைஅரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது படம் இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்ததால்  சந்தோஷமடைந்த படத்தின் தயாரிப்பாளர்..

கலாநிதி மாறன் அவர்கள் ரஜினி, இயக்குனர் நெல்சன், அனிருத் ஆகியவர்களுக்கு செக் மற்றும் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக கொடுத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் திரையரங்கையும் தாண்டி அமேசான் ப்ரைம் OTT தளத்தில் 7 ஆம் தேதி வெளியாகி வெற்றி நடை கொண்டு வருகிறது இந்த நிலையில் OTT தளத்திலும் ஜெயிலர் சாதனை படைத்துள்ளதாம். அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..

OTT தளத்தில் வெளியான உடனே ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு ஜெயிலர் படத்தை பார்த்து கண்டு களித்து வருகின்றனர் இதனால் OTT தளத்தில் உலக அளவில் அதிகம் பார்க்கப்பட்ட படங்களின் டாப்   5 லிஸ்டில் ஜெயிலர் படமும் இடம் பிடித்திருக்கிறது. இதுபோல இன்னமும் பல சாதனைகளை நிகழ்த்தும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.