தளபதி விஜயுடன் ஜோடி சேர்ந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் வனிதா விஜயகுமார். எடுத்தவுடனேயே ஹீரோயின்னாக நடித்தாலும் போகப்போக இவருக்கு வாய்ப்புகள் குறையத் தொடங்கியதால் ஒரு கட்டத்தில் அட்ரஸ் தெரியாமல் போனார்.
அதை நன்கு உணர்ந்து கொண்ட வனிதா விஜயகுமார் சினிமாவில் இருந்து விலகி திருமண விஷயத்தில் ஈடுபட்ட இதுவரை நான்கு திருமணங்கள் செய்து கொண்டாலும் எந்த ஒரு திருமண வாழ்க்கையிலும் இவர் நிம்மதியாக இருக்கவில்லை சில சர்ச்சைகளும், பிரச்சனைகளையும் சந்தித்து ஒரு கட்டத்தில் விவகாரத்தில் தான் முடிந்துள்ளன.
இதனால் பல ஏற்ற இறக்கங்களை நடிகை வனிதா விஜயகுமார் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரச்சினை என்றாலே அப்போதுதான் வனிதா விஜயகுமாரை மீடியா உலகம் சந்தித்துக் கொண்டிருந்தது இப்படி இருந்த நிலையில் விஜய் டிவி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 3 – ல் ஒரு போட்டியாளராக விஜயகுமாரை களத்தில் இறங்கிவிட்டது. தைரியமான பேச்சின் மூலம் மற்ற போட்டியாளர்களை நடுநடுங்க செய்து மக்களின் மத்தியில் தென்பட ஆரம்பித்தார்.
அதன்பிறகு பரிச்சயமான முகமாக மக்கள் மன்றம் ரசிகர்களுக்கு இவர் இருந்ததால் விஜய் டிவி இவரை தக்க வைத்துக் கொண்டு பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் தொகுப்பாளராகவும் பணியாற்ற வைத்தது. ஓடிக் கொண்டிருக்கும் இவருக்கு தற்போது வெள்ளித்திரையில் கொஞ்சம் கொஞ்சமாக வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன அந்த வகையில் பவர் ஸ்டாருடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கிறார் அந்த புகைப்படங்கள் கூட சமீபத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
வனிதா விஜயகுமார் தற்போது மீடியா உலகில் சிறப்பாக வெற்றியை நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். சமீபத்தில் வனிதா விஜயகுமார் வெளிநாடு சுற்றுலா சென்றுள்ளார் அந்த புகைப்படங்களின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வந்த நிலையில் துபாயில் இருக்கும் வனிதா விஜயகுமார் எதர்ச்சையாக ஏ ஆர் ரகுமானின் மனைவி சந்தித்துள்ளார்.
இருவரும் நன்றாக பேசி விட்டு பின் ஒரு கட்டத்தில் பர்ஃப்யூம் வாங்க போகலாம் என இருந்தார் வனிதா அப்போது அவருக்கு செலக்ட் செய்த உதவியாக ஏ ஆர் ரகுமான் மனைவி இருந்ததாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு இந்த பதிவை போட்டுள்ளார் வனிதா விஜயகுமார் இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
