சொத்து மதிப்பு விஷயத்தில் ரஜினியை முந்திய ஏ.ஆர். ரகுமான்.? எவ்வளவு கோடி தெரியுமா..

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது பயணத்தை ஆரம்பித்த ஏ ஆர் ரகுமான் இன்று இந்திய சினிமாவில் பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறார்.

இருபின்னும் தமிழ் தான் தனக்கு எல்லாம் என்பதை பல மேடைகளில் குறிப்பிடுகிறார். எப்போது எல்லாம் தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்குதோ உடனே  இசையமைக்க ஓடி வந்துவிடுவார் அதேசமயம் தாய்மொழியை விட்டுக் கொடுக்காத ஒரு மனிதனாகவும் ஏ ஆர் ரகுமான் இருந்து வருகிறார் இவர் தமிழில் இப்போது பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

அந்தவகையில் வெந்து தணிந்தது காடு கோப்ரா, மாமன்னன், இரவின் நிழல், பத்து தலை ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் இப்பொழுது இவர் இசை அமைப்பதற்காக மட்டுமே பல கோடிகளை சம்பளமாக வாங்கி வருகிறார். இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்  பாலிவுட் டோலிவுட் என பல்வேறு மொழி படங்களுக்கு இசை அமைத்து தனது திறமையை வெளிக்காட்டி நாளுக்கு நாள் தன்னை வளர்த்துக் கொண்டே வருகிறார்.

இவரைத் தொடர்ந்து இவரது மகனும் இசையில் தற்போது பயணிக்க ரெடியாக இருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நாம் அண்மை காலமாக சினிமா பிரபலங்கள் வாங்கும் சம்பளம் மற்றும் சொத்து மதிப்பு குறித்து பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு குறித்து நாம் பார்க்க இருக்கிறோம்.

ஏ ஆர் ரகுமானின் முழு சொத்து மதிப்பு சுமார் 600 கோடி இருக்கும் என கூறப்படுகிறது மேலும் பல முக்கிய இடங்களில் பங்களா வீடுகளை வாங்கி அசத்தியுள்ளார். இவரது சொத்து மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.

Leave a Comment