ஹீரோயின் போல் மாறிய ஏ. ஆர். முருகதாஸ் மகள்.. இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்

தோல்வியை சந்திக்காத இயக்குனர்களின் ஒருவர் ஏ. ஆர். முருகதாஸ். இவர் முதலில் எழுத்தாளராக தான் தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார் அதன் பிறகு தீனா படத்தை இயக்கி தன்னை இயக்குனராக அறிமுகப்படுத்தி கொண்டார். முதல் படமே அஜித்டன் கைகோர்த்து வெற்றி படத்தை கொடுத்ததால்  சினிமா உலகில் இவருக்கு நல்ல எதிர்காலமும் தோன்றியது.

அடுத்தடுத்து  விஜயகாந்த் வைத்து ரமணா, சூர்யா வைத்து கஜினி, விஜய் வைத்து துப்பாக்கி என ஹிட் படங்களை கொடுத்து ஓடினார். இயக்குனராக நல்ல படங்களை எடுத்திருந்தாலும்.. அவ்வபொழுது படங்களையும் தயாரித்தார் அந்த வகையில் எங்கேயும் எப்பொழுதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான்கராத்தே போன்ற படங்களை தயாரித்து வெற்றி கண்டார்.

திரை உலகில் சரியாக போய் கொண்டு இருந்த ஏ ஆர் முருகதாஸ் சர்கார் படத்தை இயக்கி வெற்றுக் கொண்டிருந்தாலும் அந்த படத்தின் போது பல சர்ச்சைகள் வெடித்ததால் இவரது மார்க்கெட் சரசரவென இறங்கியது இதனால் டாப் நடிகர்கள் இவருடன் படம் பண்ண யோசித்தனர்.

ஏ ஆர் முருகதாஸ் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக படங்கள் பண்ணுவதை விட்டுவிட்டு.. கதை எழுதுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் கடைசியாக கூட த்ரிஷா நடித்த ராங்கி படத்தின் கதையை இவர் தான் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்பொழுது குடும்பத்துடன் அதிகம் நேரமும் செலவிட்டு வருகிறார்கள்.

இப்படி இருக்கின்ற நிலையில் ஏ ஆர் முருகதாஸ் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையதள பக்கத்தில் வைரல் ஆகி வருகிறது.. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் மகளாக இது.. ஹீரோயின் போல் இருக்கிறார் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ ஏ. ஆர். முருகதாஸின் குடும்ப புகைப்படம்..

a. r. murugadoss
a. r. murugadoss
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment