மீண்டு வந்த விஜய் ஆண்டனி “பிச்சைக்காரன் 2” படத்திலிருந்து வெளிவந்த தரமான அப்டேட்.

விஜய் ஆண்டனி இசையமைப்பாளராக தனது பயணத்தை அறிமுகப்படுத்தினார் பின் ஹீரோவாக  நடித்தார். அந்த படங்கள் ஒவ்வொன்றும் வெற்றியை பதிவு செய்தன.  முதலில் “நான்” திரைப்படத்தில் நடித்து என்ட்ரி கொடுத்தார். அதனைத் தொடர்ந்து சலீம், பிச்சைக்காரன், திமிரு புடிச்சவன், கோடியில் ஒருவன் என அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்தார்.

இதன் விளைவாக வாய்ப்புகளும் குவிந்தது தற்பொழுது விஜய் ஆண்டனி கையில் அக்னி சிறகுகள், காக்கி, மழை பிடிக்காத மனிதன், வள்ளி மயில் போன்ற படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இதை விட ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்தை இயக்கி, நடித்தும் வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இசை, படத்தொகுப்பும் செய்து வருகிறார் இந்த படம் எப்பொழுது வெளிவரும் என்பதே பலரின் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த நிலையில் தான் பிச்சைக்காரன் 2  படத்தின் படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு  வாய், மூக்கு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் சிறிது காலம் மருத்துவமனையில் இருந்த விஜய் ஆண்டனி.. ஒரு வழியாக சிகிச்சை மேற்கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து முன்னேறி வருகிறார். இப்படி இருக்க விஜய் ஆண்டனி இயக்கி நடித்துவரும் பிச்சைக்காரன் 2 திரைப்படத்திலிருந்து ஒரு அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளது. Money is injuries to the world – பணம் உலகை காலி பண்ணி விடும்..

என்று வாசகத்துடன் விஜய் ஆண்டனி இருக்கும் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது மேலும் படத்தின் முதல் நான்கு நிமிட காட்சியை நாளை மதியம் ஐந்து மணிக்கு வெளியிடப் படக்குழு திட்டமிட்டு இருக்கிறதாம்.. இந்த அப்டேட் தற்பொழுது விஜய் ஆண்டனி ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

Exit mobile version