ரஜினியை தொடர்ந்து லால் சலாம் திரைப்படத்தில் இணைந்த முக்கிய நகைச்சுவை நடிகர்.! அட இவரா வேற லெவல் தான் போ…

lal-salaam
lal-salaam

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இவர் இயக்குனராக அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கு சர்வதேச திரைப்பட விருது கிடைத்தது.

அதன் பிறகு வை ராஜா வை என்ற திரைப்படத்தை இயக்கிய பிறகு நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார் கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்ய போவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர்.

 இந்த நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் சென்னை கோர்ட்டில் விவாகரத்து அப்ளை செய்துள்ளார். விவாரத்துக்குப் பிறகு மீண்டும் பல வருடங்கள் கழித்து இயக்குனராக களம் இறங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

 அந்த வகையில் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் திரைப்படத்திற்கு லால் சலாம் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகிய இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

 இந்த திரைப்படம் கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ரஜினி அவர்கள் நடிக்க இருப்பதாக உறுதியான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 மேலும் இந்த திரைபடத்திர்க்காக ஏழு நாட்களுக்கு நடிகர் ரஜினிக்கு 24 கோடி வரை சம்பளமாக பேசப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது அதாவது லால் சலாம் திரைப்படத்தில் பழம்பெரும் காமெடி நடிகரான செந்தில் அவர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் செந்தில் தற்போது நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதால் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.