தனுஷை நம்பி 100 கோடி போட்ட தயாரிப்பு நிறுவனம்..! அவசரப்பட்டுட்டியே குமாரு..!

0
dhanush-05
dhanush-05

தமிழ் சினிமாவில் தற்பொழுது உலக அளவில் போற்றப்படும் ஒரு நடிகர் என்றால் அவர் நடிகர் தனுஷ் தான் அந்த வகையில் இவர் கோலிவுட், ஹாலிவுட் என பல்வேறு மொழிகளில் திரைப்படங்கள் நடித்தது மட்டும் இல்லாமல் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் சரியான கதையம் கொண்ட திரைப்படங்களை தராத காரணத்தினால் தோல்வியை சந்தித்ததை தொடர்ந்து சமீபத்தில் அவர் நடித்த திருச்சிற்றம்பலம் என்ற திரைப்படம் சூப்பர் ஹிட் அடித்து விட்டது.

இவ்வாறு இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனை படைத்த நிலையில் அடுத்ததாக நடிகர் தனுஷ் அவர்கள் வாத்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசிற்காக காத்துக் கொண்டிருக்கிறது ஆனால் இந்த ரிலீஸ் சில காரணத்தின் மூலமாக தள்ளி கொண்டு போய்க் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இந்த திரைப்படம் ஆனது வருகின்ற ஏப்ரல் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்நிலையில் தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் குறித்து ஒரு அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்தினை சந்தித்த தயாரிப்பு நிறுவனம்தான் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார்கள்.

மேலும் இந்த திரைப்படம் இந்த ஆண்டின் நடுவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அதுமட்டுமில்லாமல் அதற்குள் நடிகர் தனுஷ் கேப்டன் என்ற திரைப்படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக சன் பிக்சர் தயாரிக்கும் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது இந்நிலையில் இவை தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் என்பதன் காரணமாக இந்த திரைப்படத்திற்கு 100 கோடி பட்ஜெட் ஒதுக்கி உள்ளது சன் பிக்சர் நிறுவனம்.

dhanush-50
dhanush-50

அது மட்டும் இல்லாமல் தனுஷ் திரைப்படத்தில் இதுவரை 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் என்றால் அது இந்த திரைப்படம் தான். அந்த வகையில் இந்த திரைப்படம் எப்பொழுது உருவாகும் என எதிர்பார்ப்பது மட்டுமில்லாமல் இந்த திரைப்படம் லாபத்தை கொடுக்குமா இல்லையா என்பது கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.