நாங்கள் செய்த “பாவத்தையும்” “குற்றங்களையும்” மன்னியுங்கள்..! கண்ணீர் மல்க நடிகை மும்தாஜ் வெளியிட்ட பதிவு..!

தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சியான நடனத்தின் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமான கதாநாயகி தான் மும்தாஜ் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் என்று சொல்லலாம்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இவர் ஆடிய நடனம் ஒட்டுமொத்த இலசுகளையும் கவர்ந்தது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் எளிதில் பெற ஆரம்பித்து விட்டார். மேலும் நாளடைவில் நமது நடிகை திடீரென சிறிது காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்தது பலருக்கும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஆனால் திடீரென விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டாவது சீசனில் இவர் போட்டியாளராக பங்கேற்றார் மேலும் அதில் அவர் உண்மை சுயரூபம் வெளிவந்தது மட்டுமில்லாமல் பிக் பாஸ் வீட்டின் பல்வேறு சண்டைகளை இவர்தான் முன் தொடங்கி வைத்தார் என்றே சொல்லலாம்.

இன் நிலையில் இஸ்லாமிய புனித தளமான மேக்காவிற்கு தற்பொழுது சென்று உள்ளதாக ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் மேலும் அந்த வீடியோவில் அவர் குறிப்பிட்டது என்னவென்றால் பூமியில் எனக்கு மிகவும் பிடித்த இடம் என்றால் அது இதுதான் என தெரிவித்தது மட்டுமில்லாமல் இது என்னுடைய வாழ்நாளின் பாக்கியம் என்று கூறியுள்ளார்.

mumtaj-02
mumtaj-02

மேலும் தான் அனைத்து மக்களுக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறியது மட்டும் இல்லாமல் நாங்கள் செய்த குற்றங்களை மன்னியுங்கள் எங்களுக்கு இன்பமான வாழ்க்கையை கொடுங்கள் என்ற கண்ணீர் மல்க நடிகை மும்தாஜ் பிரார்த்தனை செய்த வீடியோ ஒன்று சமூக வலைதள பக்கத்தில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Comment