தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி.! வெளியான புகைப்படத்தால் உச்சகட்ட எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய் இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் தற்போது காஷ்மீரில் மிக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது காஷ்மீரில் குளிர் அதிகமாகி விட்டதால் இரண்டு நாட்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

இதனால் பட குழுவினரை அழைத்துக் கொண்டு இயக்குனர் லோகேஷ் கனராஜ் சென்னை திரும்பி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்திருக்கிறார்கள் என்ரே சொல்லலாம் இந்த நிலையில் தற்போது ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி செம்ம வைரல் ஆகி வருகிறது.

லியோ படபிடிப்பு தளத்தில் இருந்து பல புகைப்படங்கள் வெளியாகி கொண்டே இருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு புகைப்படத்தை பிரபல நடிகை ஒருவர் வெளியிட்டிருக்கிறார் இதனால் ரசிகர்கள் மத்தியில் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

leo
leo

லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் ஏன் என்றால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதை தொடர்ந்து லியோ திரைப்படமும் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படம் எல் சி யு வில் இணைய இருப்பதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் விஜய், லோகேஷ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் ஜாலியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியான நிலையில் நடிகை திரிஷா தன்னால் முடிந்தவரை சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

கடந்த 14 ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய் உடன் தற்போது லியோ படத்தில் ஜோடி சேர்ந்து உள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் நடித்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பேற்ற நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளதால் இந்த படத்திற்கு மேலும் மேலும் எதிர்பார்ப்பை இரட்டிப்பாகி விடுகிறது.

இதோ அந்த புகைப்படம்…

trisha
trisha

Leave a Comment