கர்ப்பமாக இருப்பதை ரசிகர்களுக்கு தெரிவிக்க இப்படி ஒரு போட்டோ ஷூட்டா..? நமிதாவின் செயலால் அதிர்ச்சியான ரசிகர்கள்..!

தமிழ் திரை உலகை பொறுத்தவரை “மச்சான்ஸ்” என்று அழைத்தாலே போதும் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரு நடிகை என்றால் அது நமிதா தான் இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் எங்கள் அண்ணா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும். இதற்கு முன்பாகவே ஜெமினி திரைப்படத்தில் மனிஷா நெட்வேர்ல என்ற கதாபாத்திரத்தில் வரும் சேட்டு பெண்ணாக நடித்து இருப்பார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் மகா நடிகன், ஏய், இங்கிலீஷ்காரன், பம்பரக் கண்ணாலே, கோவை பிரதர்ஸ்,நீ வேணுண்டா செல்லம், அழகிய தமிழ் மகன், நான் அவனில்லை, பில்லா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.அதிலும் அவர் நடித்த பில்லா திரைப்படத்தை ரசிகர்களால் என்றும் மறக்க முடியாது ஏனெனில் அந்த அளவிற்கு தன்னுடைய கவர்ச்சியை இந்த திரைப்படத்தில் கொட்டித் தீர்த்து இருப்பார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் சினிமாவில் அறிமுகமானபோது குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் அதன் பிறகு கதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டியதன் காரணமாக பின்னர் அவருக்கு தொடர்ந்து கவர்ச்சி கதாபாத்திரம் கிடைத்தது மட்டுமில்லாமல் அவரை கவர்ச்சி நாயகி எனவே அனைவரும் அழைக்க ஆரம்பித்து விட்டார்கள்.

இதன் விளைவாக அவருக்கு தொடர் பட வாய்ப்பு இல்லாமல் போனது மட்டுமில்லாமல் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது இதனைப் பயன்படுத்தி எப்படியாவது மீண்டும் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடலாம் என்று நினைத்த நமிதாவிற்கு ஏமாற்றம் தான் மிச்சம்.

இதனால் திருமணம் செய்து கொண்ட நமது நடிகை குடும்ப வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துவிட்டார்.  இந்நிலையில் தன்னுடைய சிறப்பான இந்த தினத்தில் கர்ப்பமாக இருப்பதை போட்டோ ஷூட் மூலமாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.  இவ்வாறு வெளியிட்ட அந்த புகைபடத்தில் நடிகை நமீதா சிகப்பு நிற உடையில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

namitha-1
namitha-1

Leave a Comment