பிரம்மாண்டமாக வெளியான பத்துதல படத்தின் புதிய அப்டேட்.! உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.. தெறிக்கவிடும் சிம்பு…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிம்பு இவர் தற்போது பத்து தல திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு பத்து தல படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகியிருந்தது.

இந்த பாடல் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் 10 தல படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்து இருக்கிறது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு அவர்கள் ஒரு கேங்க்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து தற்போது ஒரு புதிய அப்டேட் வெளியாகியிருக்கிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் சந்தோஷத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது பத்து தல படத்தின் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் குறித்த அப்டேட் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அதாவது ஆடியோ லான்ச் மற்றும் டிரைலரை ஒரே நேரத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது அந்த வகையில் ஆடியோ லான்ச் மற்றும் ட்ரெய்லர் மார்ச் 18 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது மேலும் ஆடியோ லாஞ்சை மிகப் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நடிகர் சிம்பு அவர்கள் அடுத்ததாக நடிக்கும் திரைப்படத்தின் அப்டேட்டையும் ஆடியோ லான்ஜில் வெளியிடுவார்கள் என்றும் தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது இதனால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. சமீப காலங்களாக நடிகர் சிம்பு அவர்கள் நடிப்பில் வெளியாகி வந்த திரைப்படங்கள் சரிவர ஓடாத நிலையில் அதன் பிறகு ஒரு சிறந்த கம் பேக் கொடுத்த திரைப்படம் தான் மாநாடு.

இந்த திரைப்படம் நடிகர் சிம்புவின் சினிமா வாழ்க்கையை திடீரென புரட்டி போட்டது அந்த அளவிற்கு தன்னுடைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்று நூறு கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் 30ம் தேதி வெளியாக இருக்கும் பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். இதனை தொடர்ந்து விரைவில் படக்குழு ஆடியோலான்ஜ் மற்றும் ட்ரெய்லர் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment