‘தளபதி 68’ திரைப்படத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் புதிய டுவீஸ்ட்.! கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்பொழுது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடி ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள நிலையில் இவரை தொடர்ந்து ஏராளமான பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள் மேலும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்து உள்ளார்.

இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக இருந்து வரும் நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையில் வெளியாக இருக்கிறது. எனவே பட குழுவினர்கள் ப்ரோமோஷன் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் அந்த வகையில் நடிகர் விஜய் கூட சமீபத்தில் தன்னுடைய ரசிகர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார் மேலும் தன்னுடைய படத்தை எப்படி வெளிநாடுகளில் பிரபலமாக வேண்டும் என்பதை பற்றி பேசப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து நடிகர் விஜய்  லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் தளபதி 67 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இதற்கு முன்பு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணியில் மாஸ்டர் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது எனவே இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஏவிஎம் ஸ்டுடியோவில் மிகவும் எளிமையான முறையில் நடைபெற்றது.

இதனை அடித்து ஜனவரி மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க இருப்பதாக பட குழுவினார்கள் தெரிவித்துள்ளார்கள். இவ்வாறு தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தூங்காமல் இருந்து வரும் நிலையில் அடுத்ததாக தளபதி 68 பட்டத்தை பற்றிய தகவல் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

அதாவது தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய் இயக்குனர் அட்லிவுடன் மீண்டும் கை கோர்க்க உள்ளாராம் இந்த படத்தினை சன் பிரிக்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தெரி, மெர்சல், பிகில் போன்ற படங்களை விஜய்யை வைத்து அட்லி உருவாக்கி இந்த நிலையில் தற்போது நான்காவது முறையாக விஜய் வைத்து இயக்க உள்ளார்.

இவ்வாறு தற்பொழுது அட்லி ஷாருக்கான் வைத்து ஜவான் திரைப்படத்தினை உருவாக்கி வரும் நிலையில் படத்தினை முடித்துவிட்டு தளபதியுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கியமான தகவல் என்னவென்றால் தளபதி 68 திரைப்படத்தில் ஷாருக்கான் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment