தர்பார்க்கு வந்த புதிய சோதனை போலீசாரிடம் இயக்குனர் தஞ்சம்!!விவரம் இதோ.!

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்த படம் தர்பார். இப்படத்தில் ஹீரோவாக ரஜினி நடித்திருந்தார் இப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருந்தது, இந்த படம் பொங்கலுக்கு வெளியாகி  மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று ஓடிக்கொண்டிருந்த நிலையில் திடீரென பிரச்சனைக்கு உள்ளாகியது.

 இப்படத்தின் இயக்குனரான ஏ ஆர் முருகதாஸ் காவல்துறையிடம் புகார் கொடுத்துள்ளார். அது என்னவென்றால் தர்பார் படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு  படம் நஷ்டம் அடைந்ததாக கூறி தன்னை மிரட்டுவதாக போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளார்.

 மேலும் புகாரை ஏற்றுக் கொண்டு தனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு மெட்ராஸ் ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த நிலையில் விநியோகஸ்தர்கள் லைகா நிறுவனத்தின் மீதும் நஷ்டஈடு கேட்டனர். ஆனால் லைகா நிறுவனமோ எங்களுக்கும் இப்படத்தில் சுமார் 65 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தன. இதனால் விநியோகஸ்தர்கள் என்ன பண்ணுவது  என்று தெரியாமல் முருகதாசிடம் தஞ்சம் புகுந்துள்ளனர். 

ஏனென்றால் ரஜினியிடம் நஷ்டஈடு கேட்க முடியாத நிலையில் இவர்கள் இருப்பதால். விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தனர்

இந்த பிரச்சினையை உடனடியாக தீர்த்து வைக்க தமிழக அரசு அல்லது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன் வந்தால் மட்டுமே சுமுகமாக தீர்வு காண முடியும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம் தர்பார் படம் பிளாப் என்பதை ஆர் முருகதாஸை ஒப்புக் கொண்டுள்ளார் என குழப்பத்தில் தலைசுற்றி போய் உள்ளனர் ரசிகர்கள்.

Leave a Comment