ரஜினி : முதன்முறையாக இணையும் புதிய கூட்டணி.! இளமை திரும்புதே புரியாத புதிராச்சே..

rajini super star
rajini super star

தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்று வரை சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்த்துடன் வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் தற்பொழுது ஜெய்லர்   என்ற திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால் இனி வரும் திரைப்படங்களில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தாக வேண்டும் என்ற காலகட்டாயத்தில் இருக்கிறார்.

அதனால் தான் தேர்வு செய்யும் திரைப்படங்களில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. அது மட்டும் இல்லாமல் ரஜினி எதிர்பார்த்த வெற்றியை கொடுக்க முடியாததாள் தன்னுடைய சம்பளத்தை கூட கணிசமாக குறைத்துக் கொண்டார்  நெல்சன் இயக்கும் புதிய திரைப்படம் ரஜினிக்கு வெற்றியை தருமென மிகப்பெரிய நம்பிக்கையில் இருக்கிறார் இந்த திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, என பலரும் நடித்து உள்ளார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது இதனை அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் லைக்கா தயாரிப்பில் இரண்டு திரைப்படங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் இந்த இரண்டு திரைப்படங்களுக்காக 250 கோடி சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் இந்த இரண்டு திரைப்படங்களில் ஒரு திரைப்படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லால் சலாம் என்று பெயரிடப்பட்டுள்ள திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த திரைப்படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறார் இந்த திரைப்படத்தில் விஷ்ணு விஷால் விக்ராந்த் ஆகிய இருவரும் நாயகனாக நடிக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

மேலும் ரஜினி அடுத்ததாக சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது ஆனால் சிபியின் கதை ரஜினிக்கு பெரிதாக திருப்தி படுத்தவில்லை என்பதால் பிரதீப் ரங்கநாதனிடம் கதை கேட்டுள்ளார் அந்த கதை ரஜினிக்கு பிடித்து விட்டதால் இந்த கூட்டணி அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது அது மட்டும் இல்லாமல் ரஜினி  திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா தான் இசையமைக்க இருக்கிறதாக தகவல் கிடைத்துள்ளது.

ரஜினியுடன் முதன்முறையாக யுவன் சங்கர் ராஜா இணைய இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது மேலும் இதுவரை யுவன் சங்கர் ராஜா அஜித், விஜய், சிம்பு ஆகியவர்களுக்கு மட்டும் தான் இசையமைத்துள்ளார் இன்னும் ரஜினி மற்றும் கமலின் திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை இந்த நிலையில் ரஜினியின் திரைப்படத்திற்கு விரைவில் இசையமைக்க இருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.