95 ஆயிரத்துக்கு மது பாட்டில் வாங்கி கடைக்காரரை திணற வைத்த ஒருவர்.

A man who bought a bottle of alchol for 95 thousand and shocked the shopkeeper:தனி நபர் ஒருவருக்கு அதிக மது பாட்டில்கள் விட்டதாக காவல்துறையினர் மது கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இன்று டெல்லி, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மதுக் கடைகளை திறக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த 144 தடை விதிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 40 நாட்கள் ஊரடங்கு இருந்த நிலையில் பின் மதுபானக்கடைகள் பெங்களூரில் திங்கட்கிழமை திறக்கப்பட்டன. அப்பொழுது பெங்களூரில் ஒருவர் 95 ஆயிரத்து 347 ரூபாய்க்கு மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். மேலும் இன்னொருவர் 52 ஆயிரத்து 800 ரூபாய்க்கு மது பாட்டிலை வாங்கி உள்ளார்.

இவர் மதுக்கடையில் வாங்கிய மதுபாட்டில் ரசீது சமூகவலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது, ஏனென்றால் ஒரு தனி நபருக்கு இவ்வளவுதான் வழங்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் இவர்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக தனிநபருக்கு மது விற்றதாக காவல்துறையினர் மதுக்கடை உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-liqure-bill
-liqure-bill

Leave a Comment