இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியான முக்கிய அப்டேட்.!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் வருகிற தீபாவளிக்குள் படம் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதைத் தொடர்ந்து மேலும் ஒரு அப்டேட் வெளியாகியிருக்கிறது இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

கமல்ஹாசன், சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு மே மாதத்திற்குள் முடிக்க படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளையும் தற்போது தொடங்கி இருக்கிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு சில பிரச்சனை காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு இந்த பிரச்சனை அனைத்தையும் சுமூகமாக முடித்துவிட்டு படத்தை தொடங்கிய படகு குழுவினர் தற்போது முழுவீச்சில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தியன் 2 திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சங்கர் அவர்கள் ஆர் சி 15வது திரைப்படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது ஒரே நேரத்தில் இரண்டு படத்தை இயக்கி வரும் சங்கர் அவர்கள் இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் தற்போது வெளிநாடுகளில் தொடங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக பகூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்தியன் 2 படத்தின் அடுத்தகட்ட படபிடிப்பிர்க்கா படக்குழுவினர் சென்னைக்கு திரும்பியதாகவும் அங்கு அடுத்த கட்ட ஷூட்டிங் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது அது மட்டுமல்லாமல் சென்னையில் மட்டும் 30 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தியன் படத்தின் முதல் பாகம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்ற தொடர்ந்து தற்போது உருவாக்கி வரும் இரண்டாவது பாகம் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு எந்த ஒரு அப்டேட்டும் கொடுக்காமல் இருந்து வந்த இயக்குனர் சங்கர் இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் அப்டேட் குறித்து விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment