இந்தப் படத்துக்கு முன்னாடி அசுரன் படம் சும்மா தூசு மாதிரி!! இதை விட பத்து மடங்கு லாபத்தை பார்க்க ரெடியாக இருக்கும் தயாரிப்பாளர்.

திறமையுள்ள இயக்குனர்களை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்குகிறார் நடிகர் தனுஷ். அந்த வகையில் தனுஷின் கர்ணன் படத்தை எடுத்த இயக்குனருக்கு இதற்கு முன்பு ஓரிரு திரைப்படங்களை எடுத்து இருந்தாலும் அத்தகைய திரைப்படங்கள் நின்று பேசியதால் இந்த வாய்ப்பை அவர் கொடுத்துள்ளார்.

அதையும் திறம்பட கையாண்டு தற்போது தனுஷுக்கு ஒரு தேசிய விருதை வாங்கிக் கொடுப்பார் என்பது போல தெரிகிறது ஏனென்றால் அந்த அளவிற்கு படத்தை மிக சிறப்பாக எடுத்ததோடு ரசிகர்களுக்கு கதை அம்சத்தை புரியும்படியும் எடுத்துள்ளதால் அவரும் தனுஷும் சினிமாவில் உச்சத்தை தொட ரெடியாக இருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பெஸ்ட் படங்களாக தற்பொழுது தனுஷின் அசுரன் மற்றும் கர்ணன் திரைப்படங்கள் இருக்கின்றன. ஒருசிலர் இந்த இரண்டு திரைப்படங்களையும் கம்பெரிசன் செய்து பார்த்து அசுரன் படத்தைவிட கர்ணன் திரைப்படம் அவருக்கு பெஸ்ட் படமாக இருக்கும் என கூறுகின்றனர்.

கர்ணன் திரைப்படம் அவருக்கு நிச்சயம் தேசிய விருது வாங்கும் என கூறுகின்றனர் ஆனால் வெற்றிமாறனும் இதற்கு முன்பு தனுசுக்கு இரண்டு தேசிய விருதுகளை வாங்கிக் கொடுத்தவர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. வெற்றிமாறனும் தனுஷும் இணைந்தால் அந்த படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்பது ரசிகர்கள் அறிந்த விஷயம்.

எது எப்படியோ தனுஷ் படத்தை போட்டி போட்டுக்கொண்டு வாங்க எஸ் கலைப்புலி தாணு ரெடியாக இருக்கிறார் அப்படித்தான் அசுரன் படத்தையும் கர்ணன் திரைப்படத்தையும் படத்தை தயாரித்து நல்லதொரு விமர்சனத்தையும் வசூலையும் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அசுரன் படத்தைவிட பல மடங்கு வேற லெவலில் இருக்கும் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் இணையும் வாடிவாசல் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார் கலைபுலி தாணு.

suriya-vaadivasal

மேலும் அசுரன் படத்தில் எடுத்த லாபத்தை விட வாடிவாசல் படம் மூலம் பல மடங்கு லாபத்தை பார்க்க ரெடியாக இருக்கிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தயாரிப்பாளர் தாணு சுமாரான படத்தையே லாபம் பார்க்க கூடியவர். சூர்யா படம் என்றால் சும்மா விட்டுவிடுவாரா சந்தோஷத்தில் புரமோஷன் அறிக்கை விட ரெடியாக இருக்கிறாராம் எப்படியும் பல கோடி சம்பாதித்து விடலாம் என கணக்குப் போட்டு இருக்கிறாராம்.

Leave a Comment

Exit mobile version