பிரம்மாண்ட படத்தால் பதுங்கிய ஜெயிலர்.! கொல பசியில் காத்திருக்கும் ரஜினி…

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் உலா வருபவர் நடிகர் ரஜினி இவர் கிட்டத்தட்ட 40 வருடங்களாக சினிமாவில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார். இன்றுவரையிலும் இவருடைய இந்த சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை யாராலும் பிடிக்க முடியவில்லை அந்த அளவிற்கு சினிமாவில் நிலைத்து நிற்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இப்படி வெற்றி படங்களாக கொடுத்து வந்த நடிகர் ரஜினி சில ஆண்டுகளாக அவருக்கு சரியான படங்கள் அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக எந்திரன் திரைப்படத்திற்க்கு பிறகு அவர் நடிக்கும் திரைப்படங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வரவேற்பை பெறவில்லை.

அது மட்டுமல்லாமல் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது ஆனால் வெளியான பிறகு கடுமையான விமர்சனத்தை பெற்று மிகப்பெரிய அளவில் தோல்வி அடைந்தது. இப்படி தோல்வி பசியில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இயக்குனர் நெல்சன் திலிப் குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படம் இயக்கியிருந்தார் இந்த திரைப்படத்தின் பிறகு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தற்போது ரஜினியை வைத்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸாக காத்திருந்தது ஆனால் ஏப்ரல் மாதத்தில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வெளியாவதால் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதி தற்போது தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஏப்ரல் மாதம் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியான பிறகு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாகும் என்று தற்போது தகவல் வெளியாகியிருக்கிறது. ஏற்கனவே தோல்வி பசியில் இருந்த ரஜினி மேலும் மேலும் பயங்கர பசியில் இருக்கிறார். இதனால் ஜெய்லர் படத்தின் வெற்றியை ருசி பார்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment