நயன்தாராவை காப்பியடித்த ஹன்சிகா திருமண நாளில் நடந்த நல்ல காரியம்..! வைரலாகும் செய்தி..

hanshika
hanshika

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாப்பிள்ளை திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து என்ட்ரி கொடுத்தவர் ஹன்சிகா மோத்வானி. இவர் ஆள் பார்ப்பதற்கு கொழுக் மொழுக்கென்று இருப்பதால் மற்றும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் முதல் படத்திலேயே இவருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினர். இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு..

வேலாயுதம், வாலு, சிங்கம் 3 போன்ற படங்களில் டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து தனது மார்க்கெட்டை பெரிய அளவில் உயர்த்தி சிறப்பாக வளம் வந்தார். ஒரு கட்டத்தில் ஹன்சிகா உடல் எடை அதிகம் கூடி செம்ம குண்டாக மாறியதால் அவர் பட வாய்ப்பை இழந்து நின்றார். அதை உணர்ந்து கொண்ட ஹன்சிகா மீண்டும் உடல் எடையை குறைத்து தற்போது ஃபிட்டாக மாறி உள்ளார்.

இந்த நிலையில் ஹன்சிகா அவரது நீண்ட நாள் காதலரான தொழிலதிபர் சோஹெல் கதுரியா இருவருக்கும் ஜெய்ப்பூரில் உள்ள அரண்மனையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணம் மிக விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு முன்பாக ஹன்சிகா கையில் மருதாணி அணியும் புகைப்படம் வெளியாகியது.

அதைத்தொடர்ந்து ஹன்சிகா மற்றும் சோஹெல் இருவரும் இசை கச்சேரி நிகழ்ச்சியில் மனக்கோணத்தில் அவர்கள் நடந்து வரும் வீடியோ வெளியாகியது. மற்றும் இருவருக்கும் நலுங்கு வைப்பது போன்ற பல வீடியோக்கள் வெளியாகி சோசியல் மீடியாவில் பரவி வருகின்றன. இந்த நிலையில் ஹன்சிகா அவரது திருமணத்தை முன்னிட்டு ஆதரவற்ற குழந்தைகளை அழைத்து அவரது திருமணத்தில் விருந்து அளித்ததாக கூறப்படுகிறது.

மற்றும் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள அரண்மனையை சுற்றி இருக்கும் குழந்தைகளுக்கும் திருமண சாப்பாட்டை அனுப்பி வைத்துள்ளாராம். இது போக தன்னார்வ தொண்டு மூலம் இந்தியா முழுவதும் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கும் தனது திருமண நாளில் உணவு வழங்க ஏற்பாடு செய்துள்ளார் இந்த செயலை பாராட்டி அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்