“வலிமை” படத்தில் நான் எதிர்பார்த்த ஒரு சில சீன்கள் கிடைக்கவில்லை – வருத்தத்துடன் சொன்னா ஹுமா குரேஷி.

தமிழ் சினிமாவில் குறைந்த திரைப் படங்களை இயக்கியிருந்தாலும்  அந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டடித்த காரணத்தினால் இளம் வயதிலேயே சிறந்த இயக்குனர் என்ற அந்தஸ்தை மக்கள் மத்தியில் பெற்றுள்ளவர் இயக்குனர் ஹச். வினோத்.

அஜித்தை வைத்து முதலில் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார் அதனை தொடர்ந்து தற்போது அஜித்தை வைத்து வலிமை என்ற திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 24ஆம் தேதி உலக அளவில் வெளியாக இருக்கிறது.

இந்தியாவில் மட்டும் வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாக இருப்பது இதுவே அஜித்தின் முதல் படமாக அமைந்துள்ளது இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் மற்றும் சென்டிமென்ட் கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளதால் படம் வேற லெவலில் இருக்கும் என்பது சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் கருத்தாக இருந்து வருகிறது இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து ஹுமா குரேஷி, கார்த்திகேயா, யோகி பாபு,  புகழ் மற்றும் பல நடிகர் நடிகைகள் நடித்து அசத்தி உள்ளனர் இந்த படத்தில் நடிகை ஹூமா குரேஷி அஜித்துடன் இணைந்து முழுவதும் நடித்துள்ளதாக தெரியவருகிறது இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் வலிமை மற்றும் அஜித் குறித்து அவர் பேசியுள்ளார் அதில் அவர் சொன்னது : வலிமை இப்படத்தில் முதன்முறையாக போலீஸ் வேடத்தில் நடித்துள்ளேன் எனக்கு பைக் மிகவும் பிடிக்கும் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பைக் சாகச காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவரும் வசனங்கள் பேச இயக்குனர் வினோத் உதவினார் அதேபோன்று படப்பிடிப்பு தளத்தில் அஜித் உதவினார் முதல் நாளே அவருடன் நடிக்க சுலபமாக இருந்தது இந்த படத்தில் அஜித்துடன் டூயட் படாதது வருத்தமாக உள்ளது.

காலா படத்திற்கு நிறைய வாய்ப்புகள் அவரும் எதிர்பார்த்தேன் இயக்குனர்கள் வாய்ப்பு தந்ததால் தமிழில் தொடர்ந்து நடிக்க தயாராக உள்ளேன் தமிழ், ஹிந்தி படங்களில் இரண்டிலும் நடிப்பதற்கு வித்தியாசம் தெரியவில்லை எந்த மொழியிலும் நடிப்பு மட்டும் தான் பேசுவேன் என கூறினார்.

Leave a Comment