அஜித்தை பார்க்க “ஒரு கிலோ மீட்டர்” தூரம் ஓடிய ரசிகர்.. துணிவு திரைப்படம் குறித்து AK சொன்ன பதில்

நடிகர் அஜித்குமார் கடைசியாக நடித்த துணிவு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது இதனைத் தொடர்ந்து ஏகே 62 திரைப்படத்தில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திடீரென அஜித் ஸ்காட்லாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறார்.  அங்கு மக்களோடு மக்களாக எளிமையாக பயணம் செய்து வருகிறார் இப்படி இருந்தாலும்..

ரசிகர்கள் அஜித்தை கண்டுபிடித்து புகைப்படம் எடுத்துக் கொண்டுதான் வருகின்றனர் அப்படி ஒரு தரமான சம்பவத்தை தான் நாம் பார்க்க இருக்கிறோம் ஒரு ரசிகர் அஜித்தை பார்ப்பதற்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடிச் சென்று பார்த்ததாக கூறியுள்ளார் அந்த நிகழ்வு தற்பொழுது இணையதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் குமார்  ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ் கவ் என்ற நகரில் தங்கி உள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள கல்லூரி படித்துக் கொண்டிருக்கும் தஞ்சை மாணவர் ஒருவர் அஜித் இங்கே வந்திருப்பதை தெரிந்து கொண்டுள்ளார் இதனை அடுத்து ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடியதாகவும் அதன் பின்னர் 15 நிமிடங்கள் அவரை தேடி ஒரு வழியாக காபி ஷாப்பில் கண்டுபிடித்ததாகவும் பதிவை போட்டு உள்ளார்.

அஜித்தை நான் பார்த்திருந்தாலும் அவர்கிட்ட செல்ல தயக்கமாக இருந்தது ஆனால் அஜித் அவர்கள் எங்களை அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டார் பிறகு 15 நிமிடம் உரையாடினோம் என தெரிவித்தார். பெரிய நடிகர் என்ற பந்தா காட்டாமல் சிம்பிளாக எங்களுடன் பேசியது ரொம்ப நிகழ்ச்சியை ஏற்படுத்தியது.

பதிலுக்கு நாங்கள் துணிவு படம் நல்லா இருக்கு என்று சொல்ல நல்லா இருந்தா ஓகே சந்தோஷம் என கூறினார் மேலும் போகிற போக்கில் நீங்கள் நன்றாக படிக்க வேண்டும் என அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தாராம் இதனை அந்த ரசிகர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்.

Leave a Comment