ஜெயிலர் படத்தின் இசையை Nokia பட்டன் செல்லில் இசையமைத்த ரசிகர்.! வீடியோவை பார்த்து ஆச்சரியமடைந்த தலைவர் ரசிகர்கள்…

தென்னிந்திய சினிமாவில் மூத்த முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது வரையிலும் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமாருடன் இணைந்து ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், தமன்னா, ஜாக்கி ஷெராப், யோகி பாபு, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நெருங்கி விட்டதால் மிக தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து வேறு எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகாமல் இருந்து வரும் நிலையில் அடுத்தடுத்த படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் நடிகர் ரஜினி. அந்த வகையில் நடிகர் ரஜினி அவர்கள் தன்னுடைய மகள் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது இந்த திரைப்படத்தில் அவர் நடிக்க ஏழு நாட்கள் கால் சீட் கொடுத்து இருக்கும் நிலையில் 7 நாட்களுக்கு 24 கோடி வரை சம்பளமாக பெற இருப்பதாக கூறப்படுகிறது.

இதை அடுத்து தலைவர் 170வது திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் இந்த படத்தை ஜெய் பீம் திரைப்பட இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்க இருப்பதாக தற்போது லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினி அவர்கள் நடித்துவரும் ஜெயிலர் படத்தின் இசையை ரசிகர் ஒருவர் தன்னுடைய பழைய செல்லில் கம்போஸ் செய்திருக்கும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் வாய்ப்பிலந்து இருக்கிறார்கள் அந்த அளவிற்கு பிழை இல்லாமல் ஒரு பட்டன் செல்லில் ஜெயிலர் படத்தின் இசையை கம்போஸ் செய்திருக்கிறார் அந்த ரசிகர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment