ஸ்காட்லாந்தில் அஜித்திடம் ‘ஏகே 62’ அப்டேட் கேட்ட ரசிகர்.! அதற்கு தல கூறிய பதில்..

0
ajith
ajith

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித்குமார் தற்பொழுது ஸ்காட்லாந்த் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் நிலையில் அங்கு அவருடைய ரசிகர்கள் அஜித்வுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி துணிவு திரைப்படம் வெளியானது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்று இருந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியார் கண்மணி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரை அடுத்து சார் பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் இந்த படத்தில் க்ரிஷ் என்னும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து கலக்கி இருந்தார். இப்படிப்பட்ட நிலையில் தற்போது அஜித்குமார் அவர்கள் லண்டன் பயணத்தை முடித்துவிட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். இந்நிலையில் தற்பொழுது ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். அங்கு அஜித்தை தனது நண்பர்களுடன் சந்தித்த ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் சந்திப்பு தருணங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, தல நாங்கள் ஆறு பேரும் ஒரே வீட்டை சேர்ந்தவர்கள் முதல் படத்தில் உள்ள மூன்று பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இரண்டாவது படத்தில் உள்ள மூன்று பேர் ஆந்திராவை சேர்ந்தவர்கள் நேற்று மாலை 4 மணி அளவில் அவர்கள் போன் செய்து டேய் மச்சான் கிளாஸ்கோவில் தலடா நீங்கள் வேகமாக வந்தால் அவரை சந்திக்கலாம் என கூற உடனே அறையில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ள அந்த இடத்திற்கு நாங்கள் வேகமாக ஓடினோம்.

நாங்கள் சென்ற பொழுது தல அங்கு இல்லை எனவே அவரை 15 நிமிடம் தேடினோம் அவர் கோஷ்டா காபி கடையில் டீ குடித்துக் கொண்டிருப்பதை கண்டுபிடித்தோம். ஐந்து நிமிடம் எங்களை அவர் பார்க்கவில்லை பின்னர் அவர் எங்களை பார்த்தார் அவர் தலையை ஆட்டி எங்களை அழைத்தார் நான் அவரிடம் சென்றேன் நல்லா இருக்கீங்களா தல என்று கேட்டேன் அவர் நல்லா இருக்கேன் பா நீங்க நல்லா இருக்கீங்களா எந்த ஊரு நீங்க என்ன பண்றீங்க? என்றார்.

நான் நல்லா இருக்கேன் தல நான் தஞ்சாவூர் என்றேன் அவர் வெளியே புகைப்படம் எடுப்போம் என்றார் நாங்கள் வெளியில் சென்று அவருக்காக காத்திருந்தோம் அவர் கையை கழுவிக்கொண்டு எங்களிடம் வந்தார் அவர் மேனேஜர் ஒரு போட்டோ தான் எடுத்தாரு தல அதுக்கு நிறைய எடுங்கன்னு சொன்னாரு நான் அவர்கிட்ட நம்ம ஊர் எல்லாம் விட்டு எவ்வளவு தூரம் தள்ளி உங்கள பாக்குற சான்ஸ் கிடைச்சிருக்கு என்று சொன்னேன் அதுக்கு ஒரு சிரிப்பு சிரிச்சாரு கடைசியா போட்டோ எடுத்துக்கிட்டு அப்டேட் இருக்கா தலை என்று கேட்டோம் அதற்கு அவர் I need Break னு சொன்னாரு.

துணிவு நல்லா இருந்துச்சு தல கிளைமாக்ஸ் அந்த மாஸ்க் போட்டுட்டு நடந்து வர்றது செம்ம மாஸ்னு சொன்னேன் அதுக்கு அவர் நல்லா இருந்தாச்சா? தேங்க்ஸ் பா சொன்னாரு லாஸ்ட்ல போறப்ப ஹேண்ட்சம் பண்ணி நல்லா படிங்க பெஸ்ட் ஆஃப் லக்னு சொல்லிட்டு தம்ஸ் பண்ணிட்டு போனாரு. பெரிய செலிப்ரட்டின்னு பார்த்தா 5 நிமிஷம் எங்களோட செம ஜாலியா பேசினாரு இதெல்லாம் கனவு மாதிரி இருக்கு நேர்ல பார்க்க அவ்வளவு அழகா இருக்காரு என அந்த ரசிகர் ட்வீட் போட்டு உள்ளார்.