ரஜினி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களை மிரள வைத்த பிரபல வில்லன் நடிகர்.! மிரண்டுப்போன ஹீரோக்கள்..

0
rajini
rajini

நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் பிரபல வில்லன் நடிகரை பார்த்தாலே மிரண்டு போய்விடுவாராம் இவ்வாறு ரஜினி மட்டுமல்லாமல் ஏராளமான ஹீரோக்கள் அந்த பிரபல வில்லன் நடிகரை பார்த்து மிரண்டு போய் உள்ளனர் அது குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஏராளமான திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஹீரோக்களை மிரட்டியவர் தான் நடிகர் ரகுவரன் தமிழ் சினிமாவில் பிரபல வில்லனாக இருந்து வந்த ரகுவரன் கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர்.

அந்த வகையில் மலையாள திரைப்படமான அக்கா என்ற படத்தின் மூலம் 1982ஆம் ஆண்டு சினிமாவிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் நடித்து வந்த இவருக்கு தமிழில் ஏழாவது மனிதன் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோ மற்றும் துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

அதன் பிறகு தான் வில்லனாக நடிக்க துவங்கினார் அப்படி ஹீரோ கதாபாத்திரத்தை விட வில்லன் கேரக்டர் தான் இவருக்கு பொருத்தமாக இருந்தது எனவே இவர் வில்லனாக நடித்திருந்த அனைத்து படங்களும் சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றது. இதன் காரணமாக தொடர்ந்து இவருக்கு வில்லன் கேரக்டரில் நடிப்பதற்கான வாய்ப்புகள் குவிய தொடங்கியது.

அப்படி ரஜினி, கமல், விஜயகாந்த், சரத்குமார், கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நடிகர்களின் படங்களில் வில்லனாக ரகுவரன் நடித்திருந்தார். இந்நிலையில் ஜோடி, ஸ்டார் படத்தின் இயக்குனர் பிரவீன் காந்தி நடிகர் ரகுவரன் வில்லனாக நடித்து நின்றாலே அவரது மிரட்டலான நடிப்பை பார்த்து எப்படிப்பட்ட ஹீரோக்களாக இருந்தாலும் நடுங்கி விடுவார்கள் என கூறியிருந்தார்.

அப்படிதான் ரஜினியும் பாட்ஷா படத்தில் ரகுவரன் உடன் இணைந்து நடிக்கும் காட்சிகளில் நடுங்கிக்கிட்டு இருந்தாராம். இவ்வாறு ரகுவரனின் சிறந்த நடிப்பு, உடல் அமைப்பு, அவருக்கென இருக்கும் தனி ஸ்டைல் போன்றவற்றை வைத்து பலரும் ரகுவரனை பார்த்தால் முதலில் பயப்படுவார்களாம் இவ்வாறு இது குறித்த தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.