டிஆர்பிக்காக சிவகார்த்திகேயனை கெஞ்சொ கெஞ்சுன்னு கெஞ்சும் பிரபல தொலைக்காட்சி நிறுவனம்.!

sivakathikeyan
sivakathikeyan

தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பகால கட்டத்தில் காமெடி நடிகராக சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தன்னுடைய சிறந்த நடிப்பு திறமையினால் திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர் என்ற முக்கிய அந்தஸ்தில் இருந்து வருகிறார்.

மேலும் திரைப்படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படங்களை தயாரிப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில்  டாக்டர், டான் உள்ளிட்ட படங்களில் இவரே ஹீரோவாக நடித்து தயாரித்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் இந்த படத்தினை தொடர்ந்து தற்பொழுது இவருடைய நடிப்பில் பிரின்ஸ் திரைப்படம் உருவாகி இருக்கிறது.

வருகின்ற தீபாவளியை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது ஏனென்றால் இந்த படத்தின் மூலம் தெலுங்கு திரைவுலகில் கால் பதிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். இவ்வாறு சிவகார்த்திகேயன் சினிமாவில் இந்த அளவிற்கு வளர்ந்து இருப்பதற்கு முக்கிய காரணம் விஜய் டிவி தான்.

இவரை முதன்முறையாக மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது இந்த சேனல் தான் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி பிறகு பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார். இதன் மூலம் இவருக்கு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிவகார்த்திகேயன் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் வளர்ந்து தற்பொழுது முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பிடித்தார்.

இதன் காரணமாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு சினிமாவில் வளர்ந்ததற்கு விஜய் டிவி தான் காரணம் என்பதை மறக்காமல் இருந்து வருகிறார் அதாவது இவர் விஜய் டிவிக்காக சில விஷயங்களை செய்து வருகிறார். அதாவது விஜய் டிவி இவரை அடுத்த சூப்பர் ஸ்டார், நம்ம வீட்டுப் பிள்ளை என புகழாரம் சூட்டியது எனவே முன்னணி நடிகரான இவர் தொடர்ந்து விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் எகிரியது. தற்பொழுது விஜய் டிவி டிஆர்பியில் பெரிதும் சரிவை சந்தித்து வரும் நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து அதனை சரி படுத்துவதற்காக முடிவு செய்து இருக்கிறார்களாம் எனவே சிவகார்த்திகேயனும் தன்னை வளர்த்து விட்ட சேனலுக்காக கை கொடுத்து வருகிறாராம்.