தற்பொழுது பிரபல சீரியல் நடிகை நக்ஷத்திரா கற்பமாக இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பிரபலம் அடைந்தவர் தான் நடிகை நக்ஷத்திரா இவர் தன்னுடைய காதலரை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இவர் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு வெளிவந்த கிடாரி பூசாரி மகுடி என்ற தமிழ் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் மேலும் அந்தப் படத்தினை தொடர்ந்து பெரிதாக பட வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே சீரியல்களில் நடிப்பதை தொடர்ந்தார்.
அந்த வகையில் இவருக்கு ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி என்ற சீரியலில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியலில் மிகவும் அமைதியாகவும் பொறுப்பான மனைவி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.
இவ்வாறு இந்த சீரியலை அடுத்து கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி வந்த வள்ளி திருமணம் என்ற சீரியலில் நெகடிவ் ரோலில் நடித்து வந்தார். இவ்வாறு சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வந்த நிலையில் ஒரு கட்டத்தில் நக்ஷத்திரா குறித்து சீரியல் நடிகை ஸ்ரீநிதி கூறிய தகவல் பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பிறகு இதற்கெல்லாம் நட்சத்திர விளக்கம் அளித்த நிலையில் பிறகு திடீரென தன்னுடைய காதலர் விஷ்வா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது நடிகை நக்ஷத்திரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் சமீபத்தில் வள்ளி திருமணம் சீரியலில் நடித்திருந்த நிலையில் இந்த சீரியல் முடிவடைந்ததை தொடர்ந்து இவர் கர்ப்பமாக இருப்பதால் சில காலங்கள் சீரியலில் நடிக்க வேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். இப்படிப்பட்ட நிலையில் இன்னும் நட்சத்திர தரப்பிலிருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.