ஜவான் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து தட்டி தூக்கிய பிரபல OTT நிறுவனம்.! இத்தனை கோடியா.?

Jawan Movie OTT : ரஜினியின் ஜெயிலர் படத்தைத் தொடர்ந்து அட்லீ  இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவான ஜவான் திரைப்படம் செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. படத்தில் ஷாருக்கானுடன் கைகோர்த்து நயன்தாரா, தீபிகா படுகோன் விஜய் சேதுபதி, சானியா மல்ஹோத்ரா..

லேஹர் கான், ஜாபர் சாதிக், யோகி பாபு பிரியாமணி ரவீந்திர விஜய் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்தனர். படம் முழுக்க முழுக்க ஆக்சன், எமோஷனல், காமெடி என அனைத்தும் கலந்த படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி மக்கள் மத்தியில் படம் சென்றடைந்தது.

அதனால் படத்தை கூட்டம் கூட்டமாக பார்த்து வருகின்றனர். வசூலும் அள்ளி வருகிறது. முதல் நாளே உலகம் முழுவதும் ஜவான் திரைப்படம் 125 கோடிக்கு மேல் வசூல் செய்தது அடுத்த அடுத்த நாட்களிலும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்ததால் பெரும் நான்கு நாட்களில் மட்டுமே 500 கோடி வசூல் செய்தது சாதனை படைத்தது. ஆனால் கடந்த இரண்டு தினங்களாக ஜவான் படத்தின் வசூல்  குறைந்துள்ளது.

இதனால் பலரும் ஷாருக்கானின் ஜவான் திரைப்படம்  1000 கோடி வசூல் செய்ய வாய்ப்பே இல்லை என சினிமா வட்டாரங்கள் அடித்து கூறி வருகின்றனர். ரசிகர்கள் வருகின்ற நாட்கள் விடுமுறை நாட்கள் என்பதால் ஜவான் படம் மீண்டு வசூலில் ருத்ர தாண்டவம் ஆடும் என சொல்லி வறின்றன்ர். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.

இந்த நிலையில் ஷாருக்கானின் ஜவான் படத்தை பிரபல OTT நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது அது குறித்து  பார்ப்போம். netflix நிறுவனம் ஜவான் படத்தை 250 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வெகு விரைவிலேயே OTT தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.