ரஜினிக்காக 35 ஆண்டுகள் கழித்து சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் பிரபல முன்னணி நடிகை.! அட இந்த நடிகை அப்பவே டாப்ல இருந்தவங்களாச்சே…

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் ரஜினி இவர் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் ஒரு பான் இந்திய திரைப்படமாக உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்திருக்கிறது.

மேலும் ஜெயிலர் திரைப்படத்தில் மற்ற மாநில சூப்பர் ஸ்டார்களை களம் இறக்கி ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் இயக்குனர் நெல்சன் திலிப் குமார். அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு, சிவராஜ்குமார், சுனில், உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ராஜஈக்காக நீண்ட ஆண்டுகள் கழித்து பிரபல நடிகை சினிமாவில் ரீ என்ட்ரி செய்ய இருக்கிறார். அதாவது ரஜினியின் மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்தில் ரஜினி ஒரு கேமியோ ரோலில் நடிக்க இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

இந்த திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க களமிறங்குபவர் நடிகை ஜீவிதா இவர் 1984 ஆம் ஆண்டு வெளியான உறவை காத்த கிளி என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு  சுகமான ராகங்கள், நானே ராஜா நானே மந்திரி, உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ஜீவிதா.

இப்படி சினிமாவில் பிஸியாக இருந்து வந்த நடிகை ஜீவிதா தெலுங்கு நடிகர் ராஜசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார் திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்து வந்த ஜீவிதா தற்போது லால் சலாம் திரைப்படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக நடிக்க இருக்கிறாராம்.

இதனை தொடர்ந்து லால் சலாம் படத்திற்கு பிறகு ரஜினி அவர்கள் நடிக்கும் தலைவர் 170-வது திரைப்படத்தின் அப்டேட்டும் சமீபத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த வகையில் தலைவர் 170 வது திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் அவர்கள் இயக்கு இருப்பதாக தற்போது லைக்கா நிறுவனம் அறிவித்திருக்கிறது.

Leave a Comment