தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக திகழும் தளபதி விஜய். தற்போது லோகேஷ் உடன் இரண்டாவது முறையாக கூட்டணி அமைத்து “லியோ” திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக உருவாகி வருவதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து காணப்படுகிறது இப்போது திரை உலகில் பிஸியாக நடிகராக இருக்கும் விஜய்.
ஆரம்ப காலகட்டத்தில் பட்ட பல அவமானங்களும், அசிங்கங்களையும் ஏராளம். பின் படிப்படியாக முன்னேறி தனது கடின உழைப்பை வெளிப்படுத்தி இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். அப்படி முதலில் பட்ட இன்னல்கள் குறித்து ஒரு தகவல் வெளியாகி உள்ளது எஸ் ஏ சந்திரசேகர் முதலில் தனது மகன் விஜயை வைத்து “நாளைய தீர்ப்பு” என்னும் படத்தை இயக்கிய அறிமுகப்படுத்தினார்.
இந்த படத்தின் முதல் நாள் ஷூட்டிங் நடைபெற்றது அப்பொழுது யூனிட்டில் பணிபுரிந்த சிலரே விஜயின் காதுக்கு கேட்கும்படி இவரெல்லாம் ஹீரோவா இயக்குனர் மகன் என்றால் யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடலாம் போல என பேசி இருக்கின்றனர் முதல் நாளே விஜயை இப்படியே அப்செட் ஆக்கிவிட்டனர் பிறகு அவரது அப்பா சினிமா இப்படித் தான் இருக்கும் என கூறி அவரை கொஞ்சம் கொஞ்சமாக தேத்தினாராம்.
பிறகு சினிமாவில் நடனம், சண்டை ரொம்ப முக்கியம் எனக் கூறி அவருக்கு ஊக்குவித்துள்ளார். ஒரு வழியாக நாளைய தீர்ப்பு படம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகி விட்டதாம் இந்த நிலையில் தான் பிரச்சனையே வர தொடங்கியது பிரபல பத்திரிக்கை நிறுவனம் ஒன்று நாளைய தீர்ப்பு படம் குறித்து விமர்சனத்தை வெளியிட்டு இருந்தது அதில் விமர்சனம் என்ற பெயரில் அந்த பத்திரிகை படம் குறித்து விமர்சனத்தை சுமாராக எழுதி விட்டு விஜய் குறித்து “லாரி டயரில் சிக்கி நஞ்சுபோன தகர டப்பா போல் ஹீரோ” இருக்கிறார் என எழுதி உள்ளது.
இதனால் கொந்தளித்து போன எஸ் ஏ சந்திரசேகர் அந்த பத்திரிகையின் அலுவலகத்திற்கு சென்று சண்டை போட்டு உள்ளார் இதனை எடுத்து அந்த பத்திரிக்கை நிறுவனம் வருத்தம் தெரிவித்தது இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய்க்கு ரொம்ப அசிங்கமாக போனாதாம். மேலும் விஜய் உருவ கேலியை செய்த அந்த பத்திரிக்கையை பிரேம் போட்டு..
தனது வீட்டில் மாட்டிக்கொண்டு பின் ஒவ்வொரு நாளும் தான் வளர வேண்டும் என மனதிற்குள் கூறி கடினமாக உழைக்க ஆரம்பித்தார் அதன் பிறகு தான் இவர்களுக்கான வெற்றி கிடைக்க ஆரம்பித்தது தற்பொழுது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர் என்று அந்தஸ்தை பெற்றார் என மூத்த பத்திரிகையாளர் செய்யார் பாலு சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறினார்.