முட்டிக்கு மேல துணியை தூக்கு சீரியல் நடிகையிடம் சில்மிஷம் காட்டிய பிரபல இயக்குனர்

Kisu Kisu : சின்னத்திரையில் பிரபலமான கொழுக் மொழுக் நடிகை. வாணி ராணி, அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள், பொன்னூஞ்சல் பல சீரியல்களில் நடித்தார். மேலும் பல ரியால்டி ஷோக்களிலும் கலந்து கொண்டு அசத்தினார். பிறகு  வெள்ளித்திரையிலும் என்ட்ரி கொடுத்தார்.

2006 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் உருவான திருவிளையாடல் படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்தார் அதனைத் தொடர்ந்து கலகலப்பு, வாலு, வெள்ளைக்கார துரை, ஸ்கெட்ச் என பல படங்களில் தனது அழகையும், திறமையும் காட்டி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.. பின்பு படவாய்ப்புகள் கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

ஆனால் தனக்கு இருக்கும் ரசிகர்களை விட்டு விடக்கூடாது என்பதற்காக இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அப்படி இவர் வெளியிடும் கிளாமர் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருகின்றன.  இந்த நிலையில் கொழுக் மொழுக் நடிகை பேட்டி ஒன்றில் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட்  குறித்து பேசி உள்ளார்.

அவர் ஒரு பெரிய டைரக்டர் அவர் பெயரை சொல்ல விரும்பவில்லை அவரிடம் ஆடிஷனுக்கு போனேன். படத்தில் நான் செவிலியராக நடிக்கிறேன் என்றார்கள் நர்ஸ் வேடத்தில் இருப்பீர்கள் என சொன்னதும் நான் சரி என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். ஒரு வாரம் சூட்டிங் இருக்கு என்றார்.

அப்பொழுது அனைத்து உதவி இயக்குனர்களும் வெளியே சென்று விட்டனர் அன்று நான் சல்வார் அணிந்திருந்தேன் அப்பொழுது டைரக்டர் என்னிடம் உன் பேண்டை முழங்கால் வரை இழு என்றார் ஏன் சார் என நான் கேட்டேன் செவிலியர் வேடத்தில் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன் என்றார்.

சரி என்று சொல்லி கால் சட்டையை முழங்கால் வரை தூக்கினேன் அவ்வளவு தூக்கியதும் கொஞ்சம் மேலே தூக்க சொன்னார் அப்பொழுதுதான் அவருக்கு வேற நோக்கங்கள் இருப்பதை உணர்ந்தேன் அவர் பெரிய இயக்குனர் என்பதால் அவருடன் வாதிட முடியவில்லை நானும் நாளை வந்து காஸ்டியூம் போட்டுக் கொள்கிறேன் என்று அந்த அலுவலகத்தை விட்டு வெளியே ஓடி வந்தேன் என்றார்.