நம்பியார் வீட்டு சாப்பாட்டை சாப்பிட்டு ஆள விடுங்க என கும்பிடு போட்டு ஓடிய பிரபல இயக்குனர்.! அட பாவமே.!

60 கால கட்டங்களில் நிறைய திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களிடையே மிகவும் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்துள்ளவர் நம்பியார் இவர் அந்த காலகட்டத்தில் நடித்த அனைத்து திரைப்படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருக்கும் இவர் ஆரம்ப காலகட்ட சினிமா வாழ்க்கையில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பை தான் எதிர்பார்த்தார்.

ஆனால் இவருக்கு வில்லன் கதாபாத்திரம் கிடைத்ததால் தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டாலும் இவரது சினிமா வாழ்க்கையில் வில்லன் கதாபாத்திரமாகவே பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்துவிட்டார்.

இதனைத்தொடர்ந்து 1996 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் பூவே உனக்காக இந்த திரைப்படத்தில் விஜய்,சங்கீதா,நம்பியார் மற்றும் நாகேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.

பொதுவாகவே நம்பியார் ஷூட்டிங்கில் இருந்தால் வீட்டு சாப்பாடு மட்டும் தான் சாப்பிடுவாராம் பூவே உனக்காக திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது வீட்டு சாப்பாடு மட்டுமே சாப்பிட்டு வந்தாராம் ஒருநாள் இதனை கவனித்த விக்ரமன் என்ன சார் உங்களுக்கு மட்டும் தனி சாப்பாடு வந்திருக்கிறது.

எங்களோடு உட்கார்ந்து சாப்பிடலாமே எங்களை ஒதுக்கி இருக்கிறீர்களா எனவும் கேட்டுள்ளாராம் அடுத்த நாள் நம்பியார் விக்ரமனை அழைத்து வந்து சாப்பாடு போட்டாராம் சாப்பிடுவதற்கு முன்பு சாப்பாடு வேண்டாம்.

என்று கூறக்கூடாது என கட்டாயமாக சொல்லியே உட்கார வைத்து சாப்பாடு போட்டாராம் விக்ரமனும் ஒரு வாய் எடுத்து வைத்தால் அதில் புலி,காரம்,உப்பு என எதுவுமே இல்லையாம் அத்தனையும் கசப்பாகவே இருந்ததாம்.

nambiyar

அதன் பிறகு இத்தனை நாளா நீங்க எப்படி இதை சாப்பிடுறீங்க என கேட்டு விட்டு அந்த நாள் முழுவதும் வெறும் சக்கரை அதிகமாக போட்டு டீயினை மட்டுமே குடித்ததாக இந்த தகவல் இணையத்தில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.

Leave a Comment

Exit mobile version